பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/108

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 4 எஸ். எம். கமால் மன்னர்களிடமிருந்து பெற்ற சர்வமானியச் செப்பேடுகளும் கிடைக்கப் பெறவில்லை. மூவேந்தருமற்று மூன்று சங்கமும் போய் பாவேந்தர்கள் இலவம் பஞ்சாய் பரிதவித்த பொழுது தேவேந்திர தாருவாக, தமிழ்ப்புலவர்களைப் போற்றிப் புரந்தவர்கள் சேது மன்னர்கள். தளசிங்க மாலை, என்ற இலக்கியத்தைப் படைத்த அழகிய சிற்றம்பலக்கவிராயருக்கு ஐந்து ஊர்களைத் தானமாக அளித்து உதவினார் திருமலை சேதுபதி, அதே மன்னரது அவையில் ஒரே துறையில் ஒப்பற்ற நானுாறு பாடல்களைப்பாடி ஒரு துறைக் கோவை' யை அரங்கேற்றிய அமிர்தகவிராயர் பொன் னாங்கால் என்ற ஊரினை சர்வமானியமாக பெற்றார். ஆதிசங்கரது ஆனந்த லஹரியையும்; செளந்தரிய லஹரி யையும் தமிழில் படைத்த கவிராஜ பண்டிதருக்கு நல்லுக்குறிச்சி கடம்ப்ோடை ஊர்களைப் பட்டயமிட்டு பரிசாக அளித்தார் ரெகுநாத கிழவன் சேதுபதி. திருச்செந்துார் கோவையைப் பாடிய சர்க்கரைப் புலவர், குமாரமுத்து விஜய ரெகுநாத சேதுபதியிடமிருந்து சிறுகம்பையூர், கொண்ட ஆலங்குளம், கொடிக்குளம், என்ற ஊர்களை பரிசாக பெற்றார். அரசவைக் கவிஞராக வீற்றிருந்த ஆசுகவி மீர்ஜவ்வாதுப் புலவர், சுவாத்தன், வண்னவயல் ஆகிய கிராமங்களை முத்துராமலிங்க சேதுபதியிடமிருந்து முற்றுாட்டாக பெற்று மகிழ்ந் தார். _ இன்னும் மருதுாரந்தாதி பாடிய தலமலைக்கண்ட தேவர் மருதுார் புராணம் பாடிய சிற்றம்பல ஐயா, விஞ்சைக் கோவை, பணவிடுதுாது பாடிய பலபட்டடை சொக்கநாதப்புலவர் கொடும லூர், முருகன் பிள்ளைத்தமிழ் பாடிய சரவணப்பெருமாள்கவிராயர் ஆகிய புலவர் பெருமக்கள் சேது மன்னர்களது அன்பான அரவணைப்பில் வாழ்ந்து வந்தனர். இவையும் இவைபோன்ற இன்னும் ஏராளமான வரலாற்றுச் செய்திகளைச் சொல்லக்கூடிய செப்பேடுகள் இதுவரைக் கிடைக்க வில்லை. சேது மன்னர்களது சிறப்பான தமிழ்ப்பணியையும், இறையுணர்வையும் விளக்கக்கூடிய செப்பேடுகளைக் காண காலத்தின் கனிவினுக்கு காத்திருக்க வேண்டியது தான்.