பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேராசிரியர். எ. சுப்பராயலு கல்வெட்டியல் துறை தமிழ்ப் பல்கலைக் கழகம் தஞ்சாவூர் - 5. பாராட்டுரை தமிழ்நாட்டு இடைக்கால மூலச்சான்றுகளாக அமைபவை கல்வெட்டுகளும் செப்பேடுகளும் ஆகும். பொதுவாக, இதுவரை தமிழ்நாட்டு வரலாற்றாசிரியர்கள், சோழர்காலத்துக்குப் பின் னுள்ள கல்வெட்டுக்களையும், செப்பேடுகளையும் ஆர்வத்துடன் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளவில்லை. ஒரு காரணம் சோழர் காலத்துக்குப் பின்னர் கல்வெட்டுக்களின் எண்ணிக்கை வெகு வாகக் குறைந்து விடுவது. இரண்டாவது, விசயநகர அரசு காலத்திலும் அதற்குப் பின்பும் எழுதப்பட்ட கல்வெட்டு, செப் பேடுகளில் உள்ள மொழி, பிழை மலிந்தும் இலக்கிய நடை யற்றும் உள்ளது என்றும் கருதப்படுவது. வேறு வகையான ஆவணங்கள் நிறையக் கிடைப்பது மூன்றாவது காரணமாகலாம். இப்பிற்காலத்தில் கல்வெட்டுக்கள் குறைந்தாலும் செப்பேடுகள் மிகுந்த அளவில் கிடைக்கின்றன என்பதைக் குறிப்பிட வேண் டும். பிற அரசு ஆவணங்களில் இல்லாத பல செய்திகள் இவற்றில் குறிப்பிடப்படுகின்றன. சோழர் காலத்தோடு தமிழ்நாட்டு வரலாறு, முடிந்துவிட வில்லை. அதனைத் தொடர்ந்து வரும் வரலாற்றைப் புறக்கணிப் பதால் இந்நாட்டுச் சமுதாய, பொருளாதார, வளர்ச்சியின் உண்மை நிலை விளங்காது போய்விடுகிறது. ஆகவே சோழர் காலத்துக்குப் பின்னுள்ள விசயநகர அரசு நாயக்க மாாட்டிய அரசுகள், இன்னும் பல குறுநில அரசுகளின் கல்வெட்டுக்கள் செப்பேடுகள் தொகுத்து ஆராயப்பட வேண்டியவையாகின்றன. தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வெட்டியல் துறை வெளியிட்டுள்ள "மராட்டியர் செப்பேடுகள் கல்வெட்டுகள் , 18, 19-ஆம் நூற்றாண்டுத் தமிழ்நாட்டு வாலாற்றுக்கு எப்படி வளஞ் சேர்க் கின்றன என்பதை அவற்ற்ை மேலோட்டமாகப் பார்த்தாலே