பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/112

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 எஸ். எம், கமால் இந்த மன்னர் அரசியலில் மதுரை நாயக்க மன்னரது தொண்டராகச் செயலபட்டாலும் மறவர் சீமைக்கென தனியான நாணயங்களை அச்சிட்டு வழங்கினார். ஒருபுறம் சேதுபதி என்ற நான்கெழுத்து சொல்லும் மறுபுறம் பிள்ளையார் திரு உருவும் கொண்ட இவரது:செப்பு நாணயங்கள், இராமநாதபுரம், இராமேசுவரம், பெரியபட்டினம், ஏறுபதி ஆகியஊர்களில் கிடைத் துள்ளன. இவர் இராமேசுவரம் திருக்கோயிலில் பல கட்டுமானங் களை அமைத்ததுடன், அந்தகோயிலின் பூசனைகளுக்கும் பல கட்டளைகளை நிறுவி, அவைகளுக்கு உடலாகப் பல ஊர்களை யும் மானியமாக அளித்தார். அத்தகைய நிலமானியகளுக்கான செப்பேடுகளில், கிடைத்துள்ள மூன்று மட்டும் இங்கே கொடுக்கப் பட்டுள்ளது. 5. Rengachariya-Indian Antiquary* Vol IV (1966). p. 106.