பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xi புரியும். அந்த வகையில் டாக்டர். எஸ் எம் கமால் அவர்கள் பதிப்பித்துள்ள இந்த சேதுபதி மன்னர் செப்பேடுகள் : மிகவும் போற்றப்பட வேண்டிய ஒன்று. பதினேழு பதினெட்டாம் நூற் றாண்டுகளில் தென் தமிழ்நாட்டின் வரலாற்றுக்குப் பல புதிய செய்திகளை இந்த நூல் அளிக்கின்றது என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு இருக்க முடியாது. இந்நூலாசிரியர் தொண்ணுாறு செப்பேடுகளை மறவர் நாட்டின் பல பகுதிகளிலுமிருந்து அரிதின் முயன்று தொகுத் துள்ளார். செப்பேடுகள் கால வரிசையில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொன்றுக்கும் மூலப்பாடத்தைத் தொடர்ந்து அதனைப் பற்றிய விளக்கமும் கொடுக்கப்பட்டுள்ளது. விளக்கம் பகுதி யில் ஆசிரியர் செப்பேட்டுச் செய்திக்குத் தொடர்புடைய பிற ஆவணச் செய்திகள், செவிவழிச் செய்திகள் மற்றும் வரலாற்றுக் குறிப்புக்கள், ஆகியவற்றை உரிய சான்றுகளோடு ஆங்காங்கு கொடுத்துள்ளமை பாராட்டுதற்குரியது. இந்நூலில் கொடுக்கப்பட்டுள்ள நீண்ட முன்னுரை ஆசிரியரின் பரந்த வரலாற்றறினைப் புலப்படுத்துகிறது. சேதுபதி களின் வாலாற்றைத் தொடக்கத்திலிருந்து இறுதி வரை சுருக்க மாகக் கூறி விட்டு செப்பேடுகளை விரிவாகப் பகுத்தாய்வு செய் துள்ளார். சேதுபதி நாட்டில் சரிபாதி ஊர்கள் மா னிய ஊர்களாக இருந்தன என்பது ஒரு முக்கிய செய்தி. எந்தெந்த மன்னர் எவ்வளவு நிலக் கொடைகள் கொடுத்தார் என்பது அட்டவனை யிட்டு விளக்கப்பட்டுள்ளது. சேது நாட்டில் இருந்த நிர்வாகப் பிரிவுகள், நீர்ப்பாசன வசதிகள், சமுதாய அமைப்பு, நம்பிக்கை கள், பழக்கவழக்கங்கள் முதலிய பல செய்திகள் செப்பேடுகளி லிருந்து தொகுத்து கொடுக்கப்பட்டு ள்ள ன. அத்துடன் அவ ற் (Iり互。 التي تتر JJ H. றோடு தொடர்புடைய பிற ஆவணச் செய்திகளும் ஆங்காங்குச் சுட்டப்பட்டுள்ளமை ஆய்வாளர்களுக்குப் பெரிதும் உதவும். செப்பேடுகளின் மூலபாடங்களோடு அவற்றின் ஒளிப்படங் களையும் கொடுத்திருந்தால் இந்த நூலுக்கு மேலும் சிறப்பாக இருந்திருக்கும். பொருட் செலவு கருதி விடுபட்டிருக்கலாம்.