பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 எஸ். எம், கமால் - -- தால் அவரது விருதாவளியையும் தமது விருதாவளியாகக் கொண் டுள்ளார். இதனைப் போன்றே பதினைந்தாவது நூற்றாண்டின் இடைப்பகுதியில் மறவர் சீமையின் வடக்குப்பகுதியை தமது ஆட்சியில் கொண்டிருந்த சுந்தரத் தோளுடைய மாவலி வாணா திராயரது சிறப்புப் பெயர்களான சேது மூலாரட்சதுரந் தரன் , புவனேகவீா கஞ்சுகன்' வேதியர்காவலன்' - ஆகிய சொற்றொடர்களும்’ இந்தச் செப்பேட்டில் இடம் பெற்றுள்ளன. இந்த வாணாதிராயரது கல்வெட்டுக்கள் தேவிபட்டினம், திருப்புல்லாணி, காளையார் கோவில் திருக்கோயில்களில் உள்ளன. புவனேகவீரன்' எனப்பொறிக்கப்பட்ட இந்த மன்ன னது செப்புக்காசுகள் இந்த மாவட்டத்தில் அழகன்குளம், பெரிய பட்டினம், ஆகிய ஊர் அகழ்வுகளிலும் கிடைத்துள்ளன. மைக்கருங்கண் மாதரார் மனங்கவர்ந்த மாரவேள், மதுரை வீரகஞ்சுகன்' என்பது இந்த மன்னனைப் பற்றிய இனிய தனிப் பாடலின் தொடர்.3 எஞ்சிய நாற்பத்து ஐந்து விருதாவளிகளும் இந்த சேதுபதி மன்னரது வீரப்பண்புகளையும் சமயச்சார்பையும் கலைகளில் உள்ள ஈடுபாட்டையும் எடுத்து இயம்புவதாக உள்ளன. குறிப் பாக வன்னியராட்டந் தவிழ்த்தான்' என்ற விருதின் பின்னணி யில் முத்துகிருஷ்ணப்ப நாயக்க மன்னருடன் முரண்டிய சிவகிரி பாளையக்காரன் வன்னியனை இந்த சேதுபதி மன்னர் அடக் யொடுக்கிய வீரவரலாறு, இணைந்துள்ளது. இதனையொத்த வீரதீரச் செயல்களின் வடிவாகத்தான் இந்தச் செப்பேட்டில், விரவளநாடன், பஞ்சவன்னராவுத்தன், கொட்டமடக்கி, வீர வெண்பா மாலையான், பகை மன்னர் சிங்கம், வீரமகா கம்பீரன், மேவலர்கள் வணங்கும் இருதாளினான், விசைய லட்சுமி காந்தன், பரராஜசிங்கம் என்ற விருதாவளிகள் இடம் பெற்றுள்ளன. 2. வேதாச்சலம் - வெ. பாண்டிய நாட்டில் வாணாதிராயர் (1988) பக்கம் 15. 3. பெருந்தொகை - மதுரைத் தமிழ்ச்சங்கப்பதிப்பு (1932) பாடல் எண். 1008. 4. Sathianathaler. S – History of Madurai Nayaks (1924)