பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/121

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 95 இராமநாதபுரம் சேதுபதி மன்னர் இராமேசுவரம் திருக் கோயிலுக்கு தானமாக வழங்கியுள்ள ஏராளமான அறக்கொடை களைக் குறிப்பிடுகின்ற செப்பேடுகளில், வரலாற்று ஆய்வாளர் களுக்கு கிடைத்த முதலாவது செப்பேடு இது. இராமேசுவரம் இராமனாதசுவாமி - பர்வத வர்த்தினி அம்மன் அபிஷேகம், நெய்வேதனம், பூசை" க்காக உடையான் சடைக்கத் தேவர் தானமாக ஐந்து கிராமங்களை இராமனாத பண்டாரம் என்பவ ருக்கு வழங்கிய செய்தி அதில் உள்ளது. திருவாவடுதுறை, திருப்பனந்தாள், தருமபுரம், திருவண்ணாமலை ஆகிய ஊர் களில் உள்ள திருக்கோயில்களின் நிர்வாகத்தை நடத்திய ஆதின கர்த்தர்களான சைவத்துறவிகளைப் போன்று இராமேசு வரம் இராமனாதசுவாமி திருக்கோயிலின் நடைமுறைகளைப் பேணிப்பாதுகாத்த ஆதினகர்த்தர், இராமனாத பண்டாரம் என்பது தெரிய வருகிறது. இத்தகையதொரு ஆதினகர்த்தர் முறையை இந்தச் சடைக்கன் சேதுபதிதான் ஏற்படுத்தி இருக்க வேண்டும் என உறுதியாக நம்பலாம். ஏனெனில், இதற்கு முன்னர், கி.பி. 1585 ல் வரையப்பட்ட செப்பேட்டில் இராமேசு வரம் திருக்கோயில் பூஜாகர் சபையோர் அனைவரும், மதுரை மன்னர் வீரப்பநாயக்கருக்கு அளித்த இசைவு முறியில், இராம நாத பண்டாரம் பெயர் குறிப்பிடப்படவில்லை. பின்னர், இந்த இராமநாத பண்டாரம் என்ற சொல்தளவாய், சேதுபதி, திருமலை சேதுபதி மன்னர்கள் ஆட்சிக்கால செப்பேடு களில் குறிக்கப்பட்டுள்ளது. மற்றைய சேதுபதி மன்னர்கள் ஆட்சி காலச் செப்பேடுகளில் (நமக்கு கிடைத்தவைகளில்) இந்த ஆதின கர்த்தர் பற்றிய வேறு விவரங்கள் கிடைக்கவில்லை. என்றாலும் ராணி மங்களேசுவரி (கி.பி. 1803-12) ஆட்சிக்காலத்தில், ராணிக்கும் ஆதினகர்த்தருக்கும் இடையில் நல்ல உறவுகள் நிலவ வில்லை யென்பதை சில ஆவணங்கள் தெரிவிக்கின்றன. கி.பி. 1804 ல் இலங்கை வழியாக இராமேசுவரத்திற்கு வருகை தந்த ஆங்கிலநாட்டு ஜியார்ஜ் வாலண்டினா பிரபு, இராமேசுவரம் கோயிலில் தம்மை வரவேற்ற இளம் வயதும் முரட்டு உடல் அமைப்பும் உள்ள இராமேசுவரம் பண்டாரத்தை திமது குறிப்புகளில் வரைந்துள்ளார். கி.பி. 1883ல் ஆதின கர்த்தராக 5. Madurai Dist Records — Vol 1 157 – 7–5–1810 p. 29. 6, George Valentina — History of East indies – Vol. V.