பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 எஸ். எம் . கமால் 2 இருந்த சேது இராமநாத பண்டாரத்திற்கும் இராமநாதபுரம் அரண்மனைக்கும் இடையில் தொடர்ந்து கசப்பான உறவுகள் நிலவிவந்ததை ஒரு ஆவணமும், குற்ற இயல் வழக்கு சம்பந்த மாக பண்டாரம் சிறைப்படுத்தப்பட்ட செய்தியை இன்னொரு ஆவணமும் தெரிவிக்கின்றன. மேலும், மதுரை நீதிமன்றத்தில் கி.பி. 1857 ல் இந்த ஆதின கர்த்தர் பதவி நிரந்தரமாக நீக்கப் பட்டு இராமேசுவரம் திருக்கோயில் நிர்வாகம், இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதியிடம் ஒப்படைக்கப்பட்டது". இந்த செப்பேட்டின்படி, ஐந்து ஊர்கள், இராமேசுவரம் திருக்கோயிலுக்கு சருவமான்யமாக வழங்கப்பட்டது. அந்த ஊர் கள் இன்றைய இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி வட்டத் தைச் சேர்ந்தவை. வைகை ஆற்றின் வடகரையில் உள்ள மும்முகாத்தான், பாண்டியூர், தியாகவஞ்சேரி ஆகிய மூன்று ஊர்களும், வைகையாற்றுக்கு தெற்கே உள்ள வெங்கட்டங் குறிச்சி, கொந்தை ஆகிய இரண்டு ஊர்களும் ஆகும். மும்முடி சாத்தன் என்ற பெயர் மும்மு காத்தான் என திரிபு பெற்றுள்ளது. மறவர் சீமையில் இளையான்குடி திருஉத்தரகோசமங்கை, மேலச்சீத்தை, மேலக்கிடாரம், பெரியபட்டினம், மேலப்பனையூர், செம்பிலாங்குடி, அனுமந்தக் குடி, அறப்போது, சிறகிக்கோட்டை, ஆகிய ஊர்கள் சமணர்களது குடியிருப்பாக விளங்கியது போல இந்த ஊரும் சமணத்தலமாக இருந்தது என்பதை இந்த ஊரின் பெயரில் இருந்து ஊகிக்க முடிகிறது. தானமாக வழங் கப்பட்ட இந்த ஐந்து ஊர்களின் எல்லைகள் பற்றிய விவரங் கள் செப்பேட்டில் கொடுக்கப்படவில்லை. ஆனால் செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள நான்கெல்கைக் குட்பட்ட என்ற சொற்றொடரில் இருந்து அந்த ஊர்களுக்கு அறுதி செய்யப்பட்ட நான்கு எல்லைகள் அப்பொழுது இருந்தன என்பது புலப்படுகிறது. மேலும் அந்த எல்கைகளுக்குள் அடங்கிய விவசாய நிலங்களான நஞ்சை, புஞ்சையும், விவசாயத்திற்கு 7. Madurai Dist. Records Vol. 8900 – 7–2–1834 Page. 3 Vo| 8902 — 13—4—1935 pp. 219—2О 8. Srinivasa Iyer. R — Brief notes on Traditions and Historical relating to Rameswaram Temple (1914) p. 14