பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 97 தகுதியற்ற மேடான திட்டு, திடலும், சிறிய நீர் நிலைகளான ஏந்தலும், இந்த நிலங்களுக்கிடைப்பட்ட குட்டமும், குளமும், இவைகளில் இருந்து வசூலிக்கப்பெறுகின்ற பலவகையான வருவாய்களான பலவரியும் - (இவையனைத்தும் பொருளாக வசூலிக்கப்பட்டது) மற்றும் சில இனங்களில் இருந்து ரொக்கமாகப் பெறுகின்ற பணவரியும் இந்த தானத்தில் கட்டுப் பட்டது என்பதும் தெரிகிறது. இந்த தர்மத்தை மனப்பூர்வமாக ஏற்று நடத்துபவர் களுக்கு கங்கையிலும், தனுக்கோடியிலும் கோடிமுறை தீர்த்த மாடிய பலனும், கோடி அக்கிரகாரங்களை நிறுவிய நன்மை யையும் இந்த தருமத்திற்கு இடையூறு செய்தவர்கள் கங்கைக் கரையில் காராம் பசுவைக்கொன்ற தோஷத்திலும், மாதாபிதா வைக் கொன்ற தோஷத்திலும் போவாராகவும் எனக் குறிப் பிடப்பட்டுள்ளது. இந்து சமய சாத்திரங்களில் கங்கை மிகவும் புனிதமாகப் போற்றப்படுவதாலும், கங்கையிலே நீராடுதல் உலகத்தில் உள்ள மூன்றரைக் கோடி தீர்த்தங்களில் நீராடின பலனுக்கு ஒப்பானது என்று நம்பப் படுவதாலும் இராமபிரானது வில்லின் நுனியினுல் அகழ்ந்து அமைக்கப்பட்டதால் தனுசி கோடி தீர்த்தம் புனிதமானதாலும் இவைகளில் நீராடின பலன்’ எனச் சொல்லப்பட்டுள்ளது. மேலும் இந்தச் செப்பேட் டின் இறுதிப் பகுதியில் மிகுதியான வடசொற்கள் - உபையம், சந்திர ஆதித்தாள், சந்ததி பிரவேசம், அபிமானிச்சு. கெங்காஸ் நானம், சுகிர்தம், தீர்த்தம், கன்னிகாதானம், பூதானம், அக் கிரகாரம், பிரதிட்டை, அகிதம், விறுமகத்தி, தோசம், மாதா பிதா, என்ற சொற்கள் - பயன்படுத்தப்பட்டிருப்பது பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் தமிழ் உரைநடை வடிவைக் குறிப்பதற்கான எடுத்துக்காட்டாக உள்ளது. மற்றும், சடைக்கன் சேதுபதி, செப்பேட்டில் தளவாய்' என்ற உத்தியோகப் பெயரில் கைச்சாத்து இட்டு தானம் வழங்கி யுள்ளார். தளவாய் என்பது தளபதி என்ற பொருளில் இருந்த பதவி. தளவாய்புரம் என்ற ஊர் தென் பாண்டிய நாட்டில் உள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது. 7. சிங்காரவேலு முதலியா- அபிதான சிந்தாமணி (1908) பக்கம் 314