பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 2 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : இராமநாதபுரம் திருமலை உடையான் சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்கள் 3. செப்பேட்டுக்காலம் : சாலிவாகன சகாப்தம் 1529 பிலவங்க ஆண்டு ஆடி மாதம் கிறித்தவ சகாப்தம் 1607 (கி.பி. 10-8-1607) 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரத்தில் நிலக்கொடை சேதுபதி மன்னரது விருதாவளிகள் : தேவைநகராதிபன் சேதுமூல துரந்தரன் பூரீ இராமநாதசுவாமி காரிய துறந்தரசன் பரராஜ சேகரன் மகாமண்டலேசுவரன் அரியராய தளவிபாடன் பாசைக்குத் தப்புவராய கண்டன் மூவராய கண்டன் கண்டநாடு கொண்டு கொண்டநாடு கொடாதான் பட்டமானங்காத்தான் வீரவளநாடன் வேதியர் காவலன்