பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/127

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மனன்ர் செப்பேடுகள் 1 ()1 பூரீ ராமநாத சுவாமி சகாயன் சாடிக்கார கண்டன் சாமித்துரோகியள் முண்டன் கொட்டமடக்கிய வீர வெண்பா மாலையான் ஆரிய மானங்காத்தான் சகல சாம்பிராச்சிய வாசன் சேதுகாவலன் இந்தச் செப்பேட்டில் பொறிக்கப்பட்டுள்ள பத்தொபன்து விருதாவளிகளில், முந்தைய செப்பேட்டில் குறிப்பிடப்பட்டுள்ள பதினான்கு விருதாவளிகளுடன் அரியராய தளவிபாடன்' (பகைவர் படையை அழித்தவன்) பாசைக்குத் தப்புவராயக் கண்டன் (மொழிக்கு இடையூறு ஏற்படுத்துபவர்களை அழிப்ப வன்) சாடிக்கார கண்டன் (புரட்டர்களை ஒழிப்பவன்) சகல சாம்பிராச்சியவாசன் (அனைத்து நாடுகளையும் தனதாக்கிக் கொள்பவன்) சேதுகாவலன் (சேது என்ற திருவனையின் பாதுகாவலன்) என்ற ஐந்து புதிய விருதாவளிகளும் இடம் பெற்றுள்ளன. இவை பொதுவாக சேதுபதி மன்னரது பேராற்ற லைக் குறிப்பவை. புலப்படுத்தும் செய்தி இராமேசுவரம் திருக்கோயிலில் வழிபாடு (பூசை) கண்காணிப்பு (ஸ்தானிகம்) திருவமுதுபடைத்தல் (பரிசாரகம்) ஆகிய திருப்பணி களை , நீண்ட நெடுங்காலமாக இயற்றி வந்தவர் பஞ்சதேசத்து ஆரிய மகாஜனங்கள் எனப்பட்டனர். ஆந்திரம், கர்நாடகம், கேரளம், மராட்டம் கொங்கணம் என்றப் பகுதிகளில் இருந்து வந்தவர்கள் என்ற காரணத்தினால் பஞ்சதேசத்தினர் எனக்குறிக் கப்பட்டனர். இவர்கள் இராமேசுவரத்தில் எப்பொழுது குடியேறி னர் என்பதற்கான உறுதியான சான்று இல்லை. பாண்டிய நாட்டில் விஜய நகரப் பேரரசு ஆதிக்கம் ஏற்பட்ட பதினாறாவது நூற்றாண்டில் இவர்கள் இங்கு குடிபெயர்ந்து இருக்க வேண்டும் என்பது வரலாற்று ஊகம். ஏனைய நாட்டு பிராம்மணர்களை விட இவர்கள் ஆசாரத்தில் அப்பொழுது சிறந்து விளங்கியதும் இதற்கு காரணமாக இருக்கலாம். முந்தைய நூற்றாண்டுகளில், இந்திமொழி பேசப்படாத தென்னகப்பகுதிகளில் இருந்து தான் பெரும்பான்மையான மக்கள் இராமேசுவரம் திருக்கோயிலைத்