பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் _103 இன்றும் மராட்டா மாநிலத்தைச் சேர்ந்த அந்தணர்கள் இந்தக் கோயிலின் முதன்மைக் குருக்களாக இருந்து பணியாற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும். இந்த ஆரிய மகாஜனங்கள். குடியிருத்த விடுகள் அமைத்துக்கொள்ள சேதுபதி மன்னர் கி. பி. 1608ல் பூமிதானம் செய்ததைக் குறிப்பிடுவது இந்தச் செப்பேடாகும். இந்தக் கொடையில் கண்ட பூமி, இராமனாத சுவாமி திருக் கோயிலுக்கு கிழக்கு, வடக்கு தெற்கு, கடற்கரைகளும் இடைப் பட்ட மனைப்பகுதி (இன்று இந்தப்பகுதி இராமேசுவரத்தில் கிழக்குத் தெரு என்ற பெயருடன்) குடியிருப்பாக அமைந்துள்ளது. இதற்கான நான்கு எல்லைகளை செப்பேட்டில் பொறிக்கும் பொழுது அக்கினி தீர்த்தத்திற்கு மேற்கு என்றும், தாசரதினாதர் கோயிலுக்கு கிழக்கு என்றும் வரையப்பட்டுள்ளது. இன்றும், அதே அக்கினி தீர்த்தமும் திருக்கோயிலும் அப்படியே உள்ளன. ஆனால், கோயில் - இராமனாதசுவாமி கோயில் என்று குறிப் பிடாமல் தாசரதினாதற் கோயில்’’ என அருமையாகச் சுட்டப் பட்டுள்ளது. தசரதன் மகன்தாசரதி என்பதுவடமொழி. தாசரதியின் தமிழ் வடிவு இராமன் என்பது. இராமனது நாதனாகிய சுவாமி என்றும் இராமநாதனது சுவாமியென்றும் பொருள் கொள்ளும் வகையில் தற்பொழுது இராமநாத சுவாமி என்று வழங்கப்படுகிறது. இன்னொரு செய்தி. இந்தச் செப்பேட்டை செப்பேட்டு வாசகத்தில் கற்பகமடல் என அழகாக வரைந்து இருப்பது ஒரு ஆபூர்வப் பிரயோகமாகும். தேவலோகத்தில் உள்ள கற்பகதரு வேண்டுவோருக்கு வேண்டுவன வழங்கும் வினோத படைப்பு ஆகும். அதுபோல கற்பகதருவை ஒத்த இராமநாதபுரம் மன்னரது புதுமைக் கொடையின் சின்னமாக விளங்கும் இந்தச் செப்பேடும் கற்பக மடல் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. செப்பேட்டின் இறுதிப் பகுதி வடமொழித் தமிழாகவும் சிறந்தச் சொற்களின் தொடராகவும் உள்ளது. சர்வமானியமாக வழங்கப்பட்டுள்ள பூமியும் அதனைச் சார்ந்துள்ள மரங்கள், திட்டு, திடல், கிணறு, நீர் நீரில் உள்ள மீன்களும், குடியிருக்கும் பணியாளர்களும், அஸ்டபோகங்கள் எனச் சொல்லப்பட்ட பொன், ஆடை, அணிகலன், உணவு தாம் பூலம், பூக்கள், வாசனைப்பொருட்கள், வசதிகளும் தானம் பெற்ற