பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1C4 - எஸ். எம். கமால் - _ - - - ஆரியமகாஜனங்களுக்கு உரிமையானவை என்றும் அவைகளை வழிவழியாக அனுபவிக்கும் தகுதியும் அவர்களுக்கு உண்டு என்பதை இந்த செப்பேட்டில் விளக்கம் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்தக் கொடையைக் காத்து வருவதன் அவசியத்தை வலியுறுத்துவதற்காக சிறந்த வடமொழி நூல் ஒன்றிலிருந்து சில தொடர்கள் இந்தச் செப்பேட்டின் இறுதி வாசகமாக வரையப்ப்பட்டு உள்ளது. அதில் ஒரு அறக்கொடை யினைப் பாதுகாத்து வருவது, ஒருவர் தான் செய்த இரு அறக் கொடைகளுக்குச் சமமானது என்றும், இன்னொருவர் செய்த தர்மத்தை தமதாக்கிக் கொண்டால் தான் செய்த தர்மம் பயனற்ற தாகி விடும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தானம், செய்தல், செய்த தானத்தைக் காத்தல் என்ற இரு செயல்களிலும், பிற்றையதைப் பேணுதல் போற்றத்தக்கது என்றும், அதனால் அவர் மறுமை இன்பமாகிய சொர்க்கம் எய்துவதுடன் அந்தக் காப்பாளர் காத்தல் கடவுளாகிய திருமாலுக்கு ஒப்பாகிறார் எனவும் பெருமை பாராட்டி குறிப்பிடப் பட்டுள்ளது.