பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 3 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : தளவாய்சேதுபதி என்ற சடைக்கன் சேதுபதி. 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் இராமனாதபண்டாரம். 3. செப்பேட்டுக் காலம் : சாலிவாகன சகாத்தம் 1530 பில வங்க ஆடிமாதம் 10ஆம் நாள் (கி. பி. 10 - 8-1607) 4. செப்பேட்டின் பொருள் : பூரீஇராமநாத சுவாமி பர்வத வர்த்தினி அம்மன் உடையவர் கட்டளை பூஜைக்கு நிலக் கொடை. இந்தச் செப்பேட்டின் முதல்பகுதியில் இராமநாதபுரம் தளவாய் சடைக்கன் சேதுபதியின் ஐம்பத்து ஒரு விருதாவளிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் முந்தைய இரண்டு செப்பேடுகளிலும் பயன்படுத்தப்பட்டிருப்பவைதான் அதில் ஒரே ஒரு விருதாவளி மதுரைராயன் என்பது துரைராயன் (வரி 15) என மட்டும் மாற்றமாக உள்ளது. பிரதி செய்யப்பட்ட பொழுது ஏற்பட்ட தவறுதலாக இருக்கலாம். மேலும், இந்தச் செப்பேடு, இராமேசுவரம் திருக்கோயில் 'உடையவர் பூசைக்கட்டளைக்கு ஆப்பனுர் நாட்டில், கருங் குளம், கள்ளிக்குளம், கருசங்ளம், வேலங்குளம், பொட்டக்குளம்,