பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 O8 எஸ். எம் . கமால் விடந்தை, கண்ணன் பொதுவணமூத்தான் சிறுகளம், என்ற எட்டு எந்தல்களும் அவைகளினால் நீர்பாயும் பகுதியில் உள்ள குட்டம், குளம், நஞ்சை, திட்டு, திடல் ஆகியவைகளையும் தானமாக சேதுபதி மன்னர் வழங்கியதைக் குறிப்பிடுகிறது. இந்த ஆப்பனுார் நாடு பற்றிய குறிப்புகள் ஒன்றும் இல்லை. இங்கு மறவர்கள் மிகுதியாக பல நூற்றாண்டுகளாக வாழ்ந்து வந்த காரணத்தினால் மறவர்களின் பிரதான எட்டுப்பிரிவுகளில் ஒன்று ஆப்பனுார் நாட்டு மறவர் என்பதாக வரையறுக்கப் பட்டுள்ளது." இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் வட்டத்தில், முதுகுளத்துருக்கும் சாயல்குடிக்கும் இடைப்பட்ட பகுதிதான் அந்த ஆப்பனுார் நாடு என்பது. இந்த நாட்டைப் பற்றிய 13, 14 வது நூற்றாண்டுக் கல்வெட்டுக்கள் சிதைந்த நிலையில், முதுகுளத்துார் வட்டாரத்தில் மேலக்கிடாரத்தை அடுத் துள்ள ஈசுவரன் கோயில் சுவர்களில் உள்ளன. இந்த நாட்டின் ஏந்தல்கள் சிறிய கண்மாய்கள் - நீரை ஏந்தி இருக்கிற தால் ஏந்தல் எனப் பெயர் பெற்றன) பெரும்பாலும் மழை நீராலும், குண்டாறு, நாராயணகாவேரி மற்றும் அவைகளின் கிளைகளாலும் நிரப்பப்பெற்று மக்களுக்கு பயன்ஊட்டுபவை. அவைகளில் இந்த எட்டு ஏந்தல்களும் அடங்கும். இந்தப் பகுதிகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு வரவேண்டிய வருவாய்களான வரிசை வரி (அரண்மனைக்கு செலுத்த வேண்டிய தீர்வை) பனவரி (பனைவரி) பனைமரங் களுக்கான மரவரி) சொர்ணாதயம் (பணமாகச் செலுத்தப்படு கின்ற வரவினங்கள் இவை அனைத்தையும் (இந்தக் கட்டளைக் காக) கோயில் ஆதினகர்த்தரான இராமனாத பண்டாரம் அனுபவிச்சுக் க்ொள்ளுமாறு மன்னர் ஆணை பிறப்பித் துள்ளதை இந்த செப்பேட்டு வாசகம் தெரிவிக்கின்றது. ஆப்பனுார் நாட்டில் குறிப்பாக மேலக்கிடாரம், நரிப்பையூர், சாயல்குடி, கன்னிராஜபுரம் ஆகிய ஊர்களில் பனைமரங்கள் மிகுதியாக இருந்த காரணத்தினாலும், அந்த மரத்திலிருந்து பலவிதமான பலன்களை மக்கள் (குறிப்பாக பதநீர், நுங்கு, பழம் கிழங்கு,கருப்புக்கட்டி, ஒலை, குருத்து, ஈர்க்கி, மட்டை, கயிற்று நார், அகணி, சட்டம் என்பனவற்றை) அனுபவித்து வந்த காரணத்தி காரணத் 1. Castes and Tribes of South Indian-Thurston(1909) Vol. V. pp 2.2-48