பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கூத்தன் சேதுபதி (கி.பி. 1622-35) சடைக்கன் உடையான் சேதுபதி மன்னரது நான்கு மக்களில் மூத்தவரான கூத்தன் மறவர் சீமையின் மன்னராக முடி சூட்டப் பெற்றார். இவரது தந்தையாரது ஆட்சித்திறத் தால் நிலவிய அமைதியும் வளமையும் இந்த மன்னரது ஆட்சி யிலும் நீடித்தன. ஆனால் வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகள் எதுவும் நிகழ்ந்ததாக செய்திகள் இல்லை. என்றாலும், தமது தந்தையின் தொண்டுகளை நினைந்த 6YIIГТЭБ, இராமேசுவரம் திருக்கோயில் பணிகளில் மிகவும் அக்கரை கொண்டு இருந்தார். திருக்கோயிலின் முதற் பிரகாரத்தில் அர்த்த மண்டபம், நடமாளிகை மண்டபம் ஆகியவைகளை அமைத்து ஆலயத்தின் அழகிற்கு அணி சேர்த்தார். இந்த திருப்பணிகளை சகம் 1545ல் மேற்கொண்டதாக அங்குள்ள கல்வெட்டொன்று தெரிவிக்கின்றது. மற்றும், இராமநாதபுரம் கோட்டையின் மேற்கு மதிலுக்கு அண்மையில் கூரிச்சாத்த ஐயனாருக்கு ஆலயமொன்றையும் அமைத்து அங்கு விழா எடுப் பதற்கு திருவாடனைப் பகுதியில் நிலமானியங்களும் வழங்கினார்