பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 12 எஸ். எம். கமால் இன்னும் இவை போன்ற தானங்கள் பலவற்றை அவர் அளித்து இருந்தும் அவைகளைத் தெரிவிக்கக் கூடிய ஆவண்ங்கள் கிடைத்தில. மேலும், மக்களது வாழ்க்கை நலனிலும் இவர் மிகவும் ஈடுபாடு கொண்டு இருந்தார் என்பதற்கு இன்றளவும் அவரது பெயரால் வழங்கி வருகின்ற கூத்தன்கால் என்ற கால்வாய் ஒரு எடுத்துக்காட்டாகும். பரமக்குடி வட்டம் சூடியூருக்கு கிழக்கே வைகையாற்றில் கால்வாய் ஒன்று வெட்டப்பட்டு, ஆற்றிற்கு தெற்கே உள்ள பரமக்குடி, முதுகுளத்துர் வட்டத்தைச் சேர்ந்த வறண்ட நிலங்கள் விளை நிலங்களாக மாற்றப்பட்டன. இந்த நீர் வழங்கும் நிலையான கால்தான் கூத்தன் கால் ஆகும். கூத்தன் சேதுபதி ஆண்வாரிசு இல்லாமல் கி.பி.1635ல் <95frévlorreswrmrri-. தமிழ்நாடு ஆவணக்காப்பக ஆவணத்தின்படி இந்த மன்னருக்கு வேளாள சாதியைச் சேர்ந்த மனைவி ஒருத்தி மூலம் ஒரே ஒரு மகன் மட்டும் இருந்தான் என்றும், அவன்மறவர் சீமையின் மன்னன் ஆவதை மறக்குடித்தலைவர்கள் விரும்ப வில்லை யென்றும் அதனால் கூத்தனது இளைய சகோதரர் இரண்டாம் சடைக்கன் என முடிசூடினார் எனத் தெரிகிறது. என்றாலும், கூத்தனது மகன் தனது உரிமையை நிலைநாட்ட மதுரை மன்னர் திருமலை நா ய க் க ர து உதவியை நாடிப் பெற்றார். இவரை வரலாற்றுச் சுவடிகள் தம்பி என்றும் பெத்தன்னநாயக் என்றும் குறிப்பிடுகின்றன. -- 1... Revenue consultations No1 22(А) p. 1096 - 97