பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 4 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : தளவாய்சேதுபதி என்ற கூத்தன் - சேதுபதி. 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் இராமனாதபண்டாரம். 3. செப்பேட்டின் காலம் : சகம் 1546 ரத்தாட்சி ஆண்டு தை மீ"25 (கி.பி. 13-1-1632) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாத சுவாமிக்கு மன்னர் சலாபத்தில் முத்துக் குளிக்க உரிமை வழங்கியது. இந்த மன்னரது விருதாவளியாக இந்த செப்பேட்டில் ஐம்பத்து ஏழு சிறப்புப் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளன. இவை களில் சலுட்டராய கண்டன்', 'கியாதிப் பிரதாபன் , என்ற இரு புதிய சிறப்புப் பெயர்களைத் தவிர, ஏனையவை அனைத்தும் ஏற்கனவே கொடுக்கப்பட்டுள்ள மூன்று செப்பேடுகளில் காணப் படுபவை. இராமேசுவரம் திருக்கோயில் எழுந்தருளியுள்ள இறைவர் மீது இந்த மன்னர் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்ததை இந்தச் செப்பேட்டின் வாசகம் புலப்படுத்துகின்றது. இராமேசுவரம் திருக்கோயிலுக்கு பல ஊர்களை இறையிலி யாக வழங்கிய இந்த மன்னர், தமக்கு உரிமைப்பட்டிருந்த மன்னர் சலாபத்துறையில், முத்துக்குளிக்கிற வருடத்தில் 'இரா