பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/15

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்புரை மூத்த குடியினர் செம்பி நாட்டுக் கிளையினரான இராமநாதபுரம் மன்னர்கள். சேது காவலரான அவர்கள் செந்தமிழ் வேந்தர் களாக ஆட்சி புரிந்த ஆண்டுகள் ஐநூறுக்கும் அதிகம். அவர் களது அன்புநெறி, அருந்தமிழ்த் தொண்டு ஒப்பு உவமை இல் லாத கொடை சமயப்பணி, சமரச நோக்கு ஆகியன தமிழகத்தின் வளம் மிகுந்த வரலாற்று ஏடுகளாம். வில்லேர் வாழ்க்கை விழுத்தொடை மறவர் இன மக்களில் இந்த அரிய ஆவணங்களை தொகுத்து வெளியிட்டு உதவுவது தமிழக வரலாற்றுக்கு பல துறைகளிலும் பெருமை சேர்க்கும் பணியாகும். இத்தகைய தொண்டினை பன்னூல் ஆசிரி யரும், வரலாற்று ஆய்வாளருமான இராமநாதபுரம் டாக்டர். ... எம். கமால் அவர்கள் பல்லாண்டுகளாக மேற்கொண்டுள் ளார். அந்தப் பணியில் வெற்றியும் பெற்று வருகின்றார். அவரது முந்தைய படைப்புகளான விடுதலைப் போரில் சேதுபதி மன்னர்', 'மன்னர் பாஸ்கர சேதுபதி மாவீரர் மருதுபாண்டியர்' ஆகியவை அறிஞர் பெருமக்களின் பாராட்டு தலையும் தமிழக அரசின் சிறந்த வரலாற்று நூலுக்கான பரிசுகளையும் பெற்றுள்ளன. சேதுபதி மன்னர்களது சிறப்பு ஆவணங்களான செப்பேடு களை பல ஊர்களுக்கும் சென்று, பல இடர்ப்பாடுகளுக்கு இடை யில் தேடிச் சேகரித்து தொகுத்து, விளக்க உரையுடன் சேதுபதி மன்னர் செப்பேடுகள்' என்ற தலைப்பில் இந்த நூலினை வரைந்துள்ளார். இன்றைய தலைமுறையினருக்கும் வரலாற்று ஆய்வாளர் களுக்கும் பயன்படும் வகையில் அமைந்துள்ள இந்த அரிய தொகுப்பினை எங்களது பதிப்பாக வெளியிடுவதில் பெருமகிழ்ச்சி கொள்கிறோம். திசம்பர், 1992 இராமநாதபுரம் வடிர்மிளா பதிப்பகத்தார்