பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 5 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் இராமனாத LI 5ØØFL_ITTLD . 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1546 ரத்தாட்சி ஆண்டு தை மீ" 25 தேதி (கி.பி. 23-1-1632) 4. செப்பேட்டின் பொருள் இராமனாத பண்டாரத்திற்கு பணியாட்களை தண்டிக்கும் உரிமை வழங்கியது. இந்தச் செப்பேட்டின் வரிகள் 3-15ல் இந்த மன்னரது விருதாவளிகளாக கொடுக்கப்பட்டுள்ள ஐம்பத்து மூன்று விருதா வளிகளும் ஏற்கனவே செப்பேடுகள் 3ல் கண்டவைதான். அவை களில் மாற்றமோ அல்லது புதிய சொற்களோ இல்லை. இராமேசுவரம் திருக்கோயில் நிர்வாகத்தை இயக்கி வந்த ஆதினகர்த்தர், இராமனாத பண்டாரம், அவரது பணியில் நடை முறைகளை அமுல்படுத்தி கோயில் பணியாளர்களிடத்தும் மற்றவர்களிடத்தும் ஒழுங்கையும் கட்டுப்பாட்டையும் நிலை நிறுத்துவதற்காக, சேதுபதி மன்னர் தமது அதிகாரங்களை இராமனாத பண்டாரத்திற்கு மாற்றி வழங்கியதை இந்தச் செப்பேடு குறிப்பதால், நமது நாட்டு நிர்வாக, நீதிவழங்கல் வரலாற்றில் அதிகாரத்தை பகிர்ந்து பரவலாக்குதல் என்ற வகை யில் இந்தச் செப்பேடு ஒரு புதுமைப் படைப்பாக விளங்குகிறது. காரணம் பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கத்தில், நமது