பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 125 நாட்டின் வடபகுதியில் கிருஷ்ணா ஆற்றுக்கும் இமயமலைக்கும் இடைப்பட்ட பகுதியில் முகலாயர்களது ஆட்சி நடைபெற்று வந்தது. அந்த மன்னர்களுக்கு நீதி வழங்கல் உள்ளிட்ட அனைத்து துறைகளிலும், சகல அதிகாரங்களும் இருந்த பொழுதும், அவர்கள் நியாயம் வழங்குவதில், இஸ்லாமிய சட்ட திட்டங்களிலும் அவைகளுக்கு ஆதாரமான திருகுர்ஆனிலும் திருத்துதர் முகம்மது நபி அவர்களது போதனைகளிலும் நன்கு பயின்று முதிர்ந்த விற்பன்னர்களான காஜி களது கருத்தை ஏற்றுத்தான் நியாயம் வழங்கி வந்தார்கள். ' ஆனால், அப்பொழுது தென்னகத்தில் தன்னரசு மன்னர் களாக விளங்கிய தஞ்சை, செஞ்சி, மதுரை, இக்கேரி நாயக்கர் களும், திருவாங்கூர் மன்னரும், இராமநாதபுரம் சேதுபதிகளும், முந்தைய அரசர்களது வழியில் நின்று அவர்களது அறிவிற்கும், அனுபவத்திற்கும் உகந்தவாறு அவர்களே தங்களது நியாயத் தீர்ப்புகளை வெளியிட்டனர். இத்தகையதொரு, தொன்மை யான நடைமுறையிலும் சேதுபதி மன்னர் ஒரு சிறு மாற்றத்தைபுதுமையை - ஏற்படுத்தியதைத்தான் இந்தச் செப்பேடு குறிக் கின்றது. இராமேசுவரம் திருக்கோயில் பூரீ இராமனாதசுவாமி பர்வதவர்த்தினி அம்மன் திருத்தொண்டில் ஈடுபட்டு இருந்த இராமநாதயுரம் சேதுபதி மன்னர்கள் சேதுபதி: பொதுப் பெயரால் வழங்கப்பட்டது போல, திருக்கோயிலின் ஆதினகர்த்தரும் இந்தச் செப்பேட்டில் இராமனாத பண்டாரம் (வரி 17) என்ற பொதுப்பெயராலே குறிக்கப்பட்டுள்ளார். பூரீ இராமநாத சுவாமிக்கு சேதுபதி மன்னர் அறக்கொடையாக வழங்கியுள்ள இராமேசுவரம் தீவு கிராமங்களில் உள்ள மணியக்காரர், கணக்கப்பிள்ளைமார், குடி யானவர்கள், இராமேசுவரம் திருக்கோயில் பணியில் உள்ள பணியாளர்கள், பரிசு பட்டர், கோயில் தோப்புக்காரர், நந்த வணக்காரர்களை அவரவர் செய்த குற்றங்களுக்கு மறவர்சீமை மன்னர் என்ற முறையில் அவர்களை விசாரித்து ஆக்கினை செய்வதற்கு மன்னருக்கு சக ல அதிகாரங்களும் இருந்த பொழு என்ற இராமேசுவரம் 1. Eshwari Prasad = А short Hostcry of Muslims Rule in India (1939) p. 3 16.