பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126 எஸ். எம். கமால் --- தினும், ஒருமுற்போக்கு நடவடிக்கையாக தமது அதிகாரத்தை ஆதினகர்த்தர் இராமனாத பண்டாரத்திற்கு இந்தப் பட்டயத்தின் மூலம் மாற்றிக்கொடுத்துள்ளார். மேலும் அவரவர் செய்த குற்றங்களைப் பரிச்சுத் தெண்டினை பண்ணி விலங்குலிடுகிற பேரை விலங்கி லிட்டு குற்றா குற்றத்துக்கு ... அவராதம் வாங்கி நடப்பிச்சுக் கொள்ளச் சொல்லி கட்டளையிட்டதுடன் (வரிகள் 18-22) தோப்புகளில் அன்னிதாக இருக்கிற மானிடர் போய்த் திருடினார்களேயானால் . . . கோவில் வகையாக இருக்கிற மாடுகளை யாதாரு கள்ளர் திருட்டு புரட்டு நடப்பிச்சால், கள்ளனைப் பண்டாரமே தெண்டினை பண்ணி அவராதம் வாங்கிக் கொள்ளவும் .... (வரிகள் 24, 25, 29) என்ற மன்னரது கட்டளையை , இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. அத்துடன், இந்தக் குற்றங்களைச் செய்தவர்களைக் காவல் பண்ண பண்டாரம், கொல்லன், தச்சனை அ ழைத்தால், அவர்களும் பண்டாரத்தின் கட்டளைக்கு கட்டுப் பட வேண்டும் என்றும் (வரிகள் 28, 29) கோயில் மாட்டை யாதமொருவர் தோணியேற்றி போகும் கள்ளரை, பண்டாரத்: துடன் சேர்ந்து மணியக்காரர் தண்டினை பண்னத் தவறினால் மணியக்காரர் அரசரது ஆக்கினைக்கு உட்படுத்தப்படுவார் என்ற குறிப்பும் (வரியை 33, 34) இந்தச் செப்பேட்டில் காணப்படு கிறது. இராமேசுவரம் ஒரு தீவாக இருப்பதனாலும், திருக்கோயில் சொத்திற்கு இழப்பு ஏற்படும் வகையில் திருடர்கள் கடல்வழித் தப்பிச் செல்வதற்கு வாய்ப்பு இருந்தாலும் அங்கு நிகழும் திருட்டு, கடத்தல் ஆகிய குற்றங்களை புகலூரில் இருந்த சேதுபதி மன்னருக்குத் தெரிவித்து தீர்வு காண்பதில் தாமதமேற் படு வதைத் தடுக்க மன்னர் இந்த முறையை புகுத்தி இருக்க வேண்டும் என நம்பப்படுகிறது. அத்துடன் புனித பூமியான இராமேசுவரம் தீவில் குற்றங்கள் பெருகாமல் அவைகளை ஒடுக்க வேண்டும் என்ற உயர்ந்த நோக்கத்திலும் இறையுணர்வுடன் கோவில் நிர்வாகம் இயற்றுகின்ற பண்டாரம், குற்றங்களைக் காைந்து நியாயம் வழங்குவதில் சமன் செய்து சீர்தூக்கும் கோல் போல் அமைந்து ஒரு புறமும் சாராமல் மேன்மையுடன் நடந்து கொள்வார் என்ற நம்பிக்கையிலும், சேதுபதி மன்னர் ஆதினகர்த் தருக்கு இந்த அதிகார மாற்றத்தை அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சிகளுக்குப் பின்னணி எதுவாக இருந்த பொழுதினும்,