பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். எம். கமால் 28ו பெரும்புயலின் அழிவிற்கு முன்னர் வரை, தமிழ்நாட்டின் கணிச மான புளி தேவையை இராமேசுவரம் தீவு புளிய மரங்கள் நிறைவு செய்து வந்ததை இங்கு நினைவில் கொள்ளத் தக்கது. மற்றும் இந்த புளியடிச்சாலை துறைமுகத்தில் கி. பி. 1168ல் இலங்கையில் இருந்து புறப்பட்டு வந்த இலங்கை தண்ட நாயகனது பெரும்படை கரை இறங்கியதாக வரலாறு குறிப்பிடு கிறது.* மேலும், முந்தைய கிராம நிர்வாகத்திலும் மணியக்காரர், கணக்கப்பிள்ளை முக்கியமானவர்கள் என்பதும் தெரியவருகிறது. குடியானவர் (வரி 18) சஞ்சாரம் (வரி 19) குற்றாகுற்றம் (வரி 21) தெண்டினை (வரி 25) தோணி (வரி 29) திருட்டு பிரட்டு (வரி 30) ஆகியவை இராமநாதபுரம் வட்டாரத்தில் வழங்குகின்ற பழகு தமிழ்ச் சொற்கள் அன்னிதாக (அன்னியமாக) (வரி 24) பிராம்மணப்பிள்ளை (வரி 29) என்பன ஆபூர்வ வழக்குச் சொற்கள் சட்டாம்பிள்ளை, கணக்கப்பிள்ளை போன்று சமையல் காரருக்கு தவசிப்பிள்ளை' என்ற வழக்கும் வந்துள்ளது. இன்னும் இந்தச் செப்பேட்டில் குற்றவிசாரணையை பரிசித்து’’’ (வரி 20) என்றும் தண்டனையை தெண்டனை' (வரி 21) அபராதம் அவராதம் (வரி 22, 25) என்றும் பேச்சு வழக்கு உரைநடையாக அமைந்துள்ளது. இதனைப் போலவே இராமேசு வரம் தீவையும் மண்டபத்தையும் இணைக்கும் பாம்பன் நீர் வழி, பாம்பன் ஆற்று வழி என இயல்பாகக் குறிப்பிடப்பட்டுள்ளது இராமேசுவரம் செல்லும் பொழுது : பாம்பனாறு’ குறுக் கிட்டது என்பதும் இன்றும் இந்த வட்டாரத்தில் வழங்கும் பழமொழி. இந்த நீர்வழியில் படகுகளைக் கடத்தி விடும் உரிமை சம்பந்தமான பரங்கியரது ஆவணமொன்றில் இதனை பாம்பன் பார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. கி. பி. 1639ல் இரண்டா வது சடைக்கன்சேதுபதிக்கும் மதுரை நாயக்க மன்னரது தளவாய் இராமப்பைய னுக்கும் நடந்த போரினைப் பாடுகின்ற இராமப் பையனது அம்மானையில்’’ இந்த வழி பாம்பாற்றங்கரை' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. * 2. Krishnasamy lyangar Dr. S. South India and Her Mohammadan Invaders ( 928) p. 3. 3. Madurai Dist Records Vol : 4674 – 1 O-1–1826. 4. இராமப்பையன் அம்மானை (தஞ்சை சரஸ்வதி மகால் பதிப்பு)