பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 6. (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் இராமனாத பண்டாரம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1549 ஆண்டு விபவ ஆண்டு சித்திரை மாதம் 10ஆம் நாள் (கி.பி. 1627) 4. செப்பேட்டின் பொருள் : கோயில் உள்துறைக் கட்டளைப் பூசை நடப்பிப்பது சம்பந்தமான ஆணை விருதாவளிகள் : இந்தச் செப்பேட்டின் தொடர்பாக பதினாறு விருதா வளிகள் மட்டும் கொடுக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் இந்த மன்னரது முந்தைய செப்பேடு எண்கள் 4, 5லும் பொறிக்கப் பட்ட விருதுகள் தான். ஆனால் எண்ணிக்கை குறைவாக இருப்பதற்கான காரணம் தெரியவில்லை. புலப்படுத்தும் செய்திகள் : இராமேசுவரம் இராமனாத சுவாமிக்கு ஆறுகால பூசைகள் இப்பொழுது நடைபெற்று வந்தாலும் தொடக்கத்தில் அர்த்தசாம பூசை மட்டும் இரவு 9-00 மணிக்கு நடந்து வந்தது என்றும் அதற்கு இந்த மன்னர் பிச்சிப்பூவும் பச்சைப்பாலும் கொண்ட அபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்து இருந்தார் என்ற செய்தியை வரிகள் 14-15, தெரிவிக்கின்றன. பின்னர், இதே மன்னர் இராமனாத சுவாமிக்கு சகல உபகரணங்களுடனேயும் அபி சேகம், நெய்வேத்தியம், உச்சவம் முதலாகியது நடப்பிக்க