பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்த நூல் பதினாறாவது நூற்றாண் டின் தொடக்கத்தில் தமிழகத்தில் வடபுலத்து வடுக ரும் , பேனா ட்டு பரங் கெளும் புகுந்து ஆங்காங்கு தங்களது அதிகாபத்தை ைெலநாட்டி வந்தனர். இதனால் நமது தாய்மொழியான தமி 1ம், தமிழரது வாழ் வும் பெரும ளவில் பாதிக் கப்பட்டது. இந்த இக்கட்டான சூழ்நிலையில் சேதுபதிகள் மூவேந்தர் வழி நின்ற மூவாத் தமிழைக் காத்து வளர்த்தனர். புலவர்களது வறுமையையும், வாழ்க்கைச் சிறுமையையும் களைந்து, அவர்கள் பெருமையுடன் வாழ பூமியும், காணியும் வழங்கி புரந்தனர் . மற்றும் மக்களிடையே சமய உண ர்வும், சமரச மனப்பான்மையும் செழித்து வளர்ந்திட திருக்கோயில், திருமடம், தர்கா, தேவாலயம், ஆகிய பல்வேறு அமைப்புகளுக்கு ராளமான நிலக்கொடைகளை வ ழங்கி மகிழ்ந்தனர். வாலாற்று ஆவணங்களாக விளங்கும் இந்த மன்னர்களது செப்பேடுகளை தேடித் தொகுக்கும் பணியில், ஐந்து ஆண்டு களாக முயன்று வந்தேன். காலநீட்சியில், பல்வேறு சமுதாயச் சூழ்நிலையில், பெரும்பாலான செப்பேடுகள் மறைந்து விட்டதை அறிந்து மனம் வருந்தினேன். சேதுமன்னர்களது நூற்றுக்கணக் கான செப்பேடுகளில் ஒரு நூறு செப்பேடுகளைக் கூட பெற இயலாத நிலை. எஞ்சியுள்ள சிலவற்றையாவது இறையருளால் இனங்கண்ட மனநிறைவுடன் இந்தத் தொகுப்பை நிறைவு செய்துள்ளேன். இந்தச் செப்பேடுகளை படிஎடுத்ததைவிட, இவைகளை படித்து, புரிந்து, விளக்க உரை வரைவதில் பன்மடங்கு இடர்ப் பாடுகள் ஏற்பட்டன. பதினெட்டாம் நூற்றாண்டுத் தமிழ் உரை நடையின் பிரதிபலிப்பான செப்பேடுகளின் தமிழ்ச் சொற்களுடன் கிரந்தம், சமஸ்கிருதம், தெலுங்கு, நாகரி. மோடி மொழிச் சொற்கள் மணிப்பிரவாளமாக கலந்து பிழையான சொற்றொடர் களாக அமைந்துள்ளது ஒருபுறம் . இந்தச் சொற்றொடர்களில் பயன்படுத்தப்பட்டுள்ள சொற் களில் உள்ள, மெய் எழுத்துக்கள் புள்ளி (ஒற்று) இல்லாமல் வரையப்பட்டு உயிர்மெய் எழுத்தாக காணப்படுவது இன்னொரு புறம். இவைகளைத் தொடர்ந்து, சொல்லின் முன்பாக வரையப்