பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/160

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 34 எஸ். எம். கமால் வேண்டுமென்று கட்டளையுண்டு பண்ணி, கிராம பூமியளும் விட்டு நடப்பித்து... (வரிகள் 16-18) வருமாறு செய்தார். இந்த நடைமுறையில் எழுந்த சிறு சிக்கல் ஒன்றினை இராமனாத பண்டாரமும், அர்ச்சகரும், ஸ்தானிகருமாக மூவரும் சென்று மன்னரைச் சந்தித்து சிக்கலுக்கு தீர்வு பெற்றதனை விளக்கும் அரசரது ஆணையைக் கொண்டது இந்தச் செப்பேடு. = - - - To மறவர் சீமையின் மன்னர் என்ற முறையில் தம்மைப் புகழ்ந்து பாராட்டக்கூடிய குடிகளும் ஊழியர்களும் அவருக்கு பிரியம் ஏற்பட வேண்டுமென்பதற்காக, அவரது வழிபாட்டுக் கட்டளைக்கு காணிக்கைகளும் உபயங்களும் அளித்தால், அவை களை அந்தக் கட்டளைக்குப் பயன்படுத்தாமல், அவைகளைப் பூர்வமான கோயில் உள்துறை கட்டளையில் சேர்த்துக்கொள்ள: வேண்டும் என தெளிவுபடுத்தி இந்த ஆணையைப் பிறப்பித்துள் சிார். அதற்கு அடிப்படையாக அவர் கூறியுள்ள காரணம் வியக்கத்தக்கதாக உள்ளது. அவரது சொற்களிலே அந்த விளக்கத்தைப் பார்ப்போம் நம்முடைய கட்டளைக்கு நமது சொந்த திரவியம் கொண்டு அபிஷேக, நைவேத்தியம், உச்சபம், நடப்பித்து, அந்தப்பலன் நம்மை வந்து சாருகிறதேயல்லாமல், பிறத்தியாருடைய திரவியம் பாவத்திரவியமாக இருக்கும் ஆனபடியினாலே, நம்முடைய கட்டளையிலே வாங்கி நடப்பிக்கத் தேவையில்லை ....' (வரிகள் 32-36) முன்னுாற்று ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னிருந்த மன்னர் ஒருவரது மனச்சான்று, என்விதம் அமைந்து இருந்தது என்பதை எடுத்துக்காட்டும். இணையிலாத ஆணையாக இது அமைந்து உள்ளது. தீதின்றி வந்த பொருள் தானே, அறம் ஈனும் இன்பமும் ஈனும்' என்று திருவள்ளுவப் பெருந்தகை வரைந்துள்ள வள்ளுவத்தை வாழ்க்கை நெறியாகக் கொண்டு வாழ்ந்த அந்தத் தமிழ் மன்னரது செங் கோன்மை எப்படி இருந்து இருக்கும் என்று எண்ணிப்பார்க்கும் பொழுது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. இராமநாத சுவாமி காரிய துரந்தன்' என்ற விருது அந்த மன்னருக்கு நூற்றுக்கு நூறு பொருத்தமானது தானே ! - - - மற்றும், இந்தச் செப்பேட்டின்படி, இராமேசுவரம் திருக். கோயில், சேதுபதி மன்னரது சொந்த திருப்பணியாக இருந்த, பொழுதினும், அந்தக் கோயிலின் அன்றாட நடைமுறைகளாக அபிசேகம், நைவேத்தியம் உற்சவம் ஆகியவைகளைத் திறம்பட