பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/161

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 135 தொடர்ந்து நடத்துவதற்கு கோவில் உள்துறைக் கட்டளை என்ற அமைப்பும், சேதுமன்னர் அப்பொழுதக்கப்பொழுது சிறப் பான பூசைகள் நடத்துவதற்கு தனியான அமைப்பும் இருந்தன என்பது தெரியவருகிறது. அர்த்தசாமம், சகல 'உபகரணங்கள், அபிஷேகம், நை வேத்தியம் உச்சபம் (உற்சபம்) அர்ச்சகன், தானிகர், கிராமம், பூமி, காரியக்காரர் பிரதிப், புரோசனம் (பிரயோசனம்) திரவியம், பாவம் ஆகிய வடசொற்கள், இயல்பான தமிழ்ச் சொற்களைப் போல இந்தச் செப்பேட்டிலும் பயன்படுத்தப்பட்டுள்ளன. பட்டக் காணிக்கை, பட்டக்கிராமம் என்பன மானியம்-மானியமாக வழங்கப்பட்ட ஊர் - என்பனவற்றை முறையே குறிக்கின்றன.