பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 7 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : இராமேசுவரம் குருக்கள் சபை யாரும், தமிழ் ஆரியர் அனை வரும். 2. செப்பேடு பெற்றவர் : தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதி 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1553, o ஆண்டு பிறஜோத்பத்தி தை மாதம் 15 4. செப்பேட்டின் பொருள் : இசைவு முறி இதுவரை படித்த செப்பேடுகளுக்கு மாற்றமானது இந்தச் செப்பேடு. சேதுபதி மன்னருக்கு இராமேசுவரம் திருக்கோயிலில் பணி செய்து வந்த குருக்கள் சபையாரும் தமிழ் ஆரியரும் எழுதிக் கொடுத்த இசைவு முறியாகும்.இராமேசுவரம் திருக்கோயில் நடை முறைகளை ஒழுங்காகவும் முறையாகவும் நிறைவேற்றி வைப்ப தற்காக, திருக்கோயில் திருப்பணியாளர்கள் இணக்கம் தெரி வித்து வரைந்து வழங்கிய இந்தப்பிடி பாடு தளவாய் சேதுபதி மன்னருக்கும் எழுதப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டில் கண்ட மறவர் சீமை மன்னராக இருந்தவர் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதியாகும். மதுரை நாயக்க மன்னருக்கு கட்டுப்பட்ட தளவாயாக சேதுபதி மன்னர் இருந்ததால், அப் பொழுது ஆட்சியில் இருந்த திருமலை நாயக்கர் (கி.பி. 1628-09) பெயரும், முறியின் வாசக அமைப்பு முறைக்காக சேர்க்கப் பட்டுள்ளது. ஏனெனில், மறவர் சீமையின் அரசியலை திறம்பட நடத்தியது மட்டுமல்லாமல் மதுரை முத்துக்கிருஷ்ணப்ப நாயக் ரது சிறந்த தளவாயாகப் பணியாற்றிய சடைக்கன் சேதுபதி