பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

T 42 எஸ். எம். கமால் கிறது மேலும், இந்தப்பிடிபாடு அன்றைய கோயில் பணியாளர் களுக்கு எத்தகைய கடமைகள் இருந்தன என்பதையும் அவை களை இன்றைய நிலையுடன் ஒப்பீடு செய்வதற்கு உதவியா கவும் உள்ளது. -- இந்த பிடிபாட்டில் ஒப்பமிட்டவர்கள் இருபிரிவினர் குருக்கள் மார் சபையார், தமிழ் ஆரியர்களும். குருக்களாக பணியாற் றுகின்ற அந்தணர், மராட்ட மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் பதினான்காம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இராமேசுவரத் திற்கு இடம் பெயர்ந்து வந்து, அங்கேயே நிலையாகத் தங்கி விட்டவர்கள். இராமனாதசுவாமிக்கு பூசை பண்ணக் கூடிய தனி உரிமையை வழிவழியாகப் பெற்றவர்கள் . இன்றும் அவர்களே. இராமேசுவரம் திருக்கோயிலின் பூசாகர்களாக இருந்து வருகின்றனர். இந்த சிறப்பான உரிமை, இங்குள்ள, தமிழ் அந்தணர் களுக்கு அல்லாமல் அவர்களுக்கு மட்டும் எந்த சூழ்நிலையில் வழங்கப்பட்டது, என்பதற்கான ஆவணங்கள் இல்லை. இத்தகையதொரு ஊழியமுறை திருச்சீரலைவாய் திருக்கோயிலில் இருந்து வருகிறது. திருமுருகனுக்கு நித்ய பூசை செய்கின்ற வர்கள் கேரளத்தைச் சேர்ந்த போத்திகள் என்ற அந்தணர்கள், பதினான்காவது நூற்றாண்டில், திருச்செந்துார்ப்பகுதி ஒரு குறுகிய காலம் தான் கேரள மன்னர் பிடிப்பில் இருந்தது. அப்படி இருந்தும், இந்தக் கோயிலுக்குள் போத்திகள்' எவ்விதம் புகுந்தனர் என்பதற்கான விளக்கம் இல்லை. இன்றும், குமரி மாவட்ட கோயில்கள் பலவற்றில் கேரள நாட்டு போத்தி களும் மேசாந்திகளும்' கோயில் பணியில் இருப்பது குறிப் படத்தக்கது. இவர்கள் மேற்கொண்டிருந்த கோயில் பணிகளாவன (வரிகள் 2-10) 1. அனுமேசுர பூஜை, 2. இராமநாதசுவாமிக்கு பூஜை . 3. மலைவளர் காதலிக்கு பூஜை . 4. படிகலிங்க பூஜை . 5. இராமனாதசுவாமி (உற்சவக்கிரக) பூஜை . 6. தாண்டேசுவரர் பூஜை 7 தேவை அம்பலவாணருக்கு பூஜை