பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 1 Mo, - - - அனுமனை, அனுமேசுவரர் என்று குறிப்பிட்டிருப்பது (வரிகள் 2-5) ஒரு புதிய வழக்கு. இராமேசுவரம் திருக்கோயிலின் அன்றாட வழிபாடுகள், கோயிலின் கிழக்கு முகப்பில் தெற்கு நோக்கி இருக்கும் அனுமார் திருக்கோயிலில் முதலில் சேகண்டி முழக்கத்துடனும் பின்னர் நாதசுர வாசிப்புடனும் தொடங்கு கின்றன . இந்த அளவிற்கு சிறப்புடன் அனுமனை, இராமனது தொண்டராக அல்லாமல் இராமனைப் போன்று தெய்வமாக (ஈசுவரர்) குறிப்பிடப்பட்டுள்ளது. இராமலிங்கப்பிரதிஷ்டையால் பெயர் பெற்று இருப்பது இராமேசுவரம் மட்டுமல்ல, அனுமனும் தானே! = இன்றைய சபாபதி, நடராஜர் சன்னதிகள் முன்னர் தேவை அம்பலவாணர், தாண்டேசுவரர் சன்னதிகள் என வழங்கப்பட்டு வந்துள்ளன. அதுபோல அம்மனின் பெயரும் பர்வதவர்த்தினி என்பதற்கு பதில் மலைவளர் காதலி என்றும் வழங்கப்பட்டுள்ளது. இந்தச் செப்பேட்டு காலத்திற்கு பின்னர், இராமேசுவரம் திருக்கோயிலுக்கு வருகை தந்த தாயுமான அடிகள் அம்பிகையை தரிசித்து பாடியுள்ள பாடல்கள் மலை வளர் காதலிபதிகம்' ஆகும். இவைகளைப்போன்றே இந்த திருக் கோயிலில் வடக்குப் பிரகாரத்தில் உள்ள சண்டிகேசுவரி வெள்ளை துர்க்கை அம்மன் (வரி 4) என வழங்கப்பட்டார். வெள்ளிக்கிழமை தோறும் இந்த அம்மனுக்கு சுக்கிர வார விழா சிறப்பாக நடை பெற்றுள்ளது. மேலும் செப்பேட்டில் கண்ட விசுவலிங்கம் (வரி10) இப்பொழுது ஜோதிர்லிங்கம் என வழங்கப்படுகிறது. வெள்ளை படிகத்திலான இந்த லிங்கம் சுமார் ஒன்றேகால் அடி உயரமும் முக்கால் அடி விட்டமும் கொண்ட ஒரு அரிய கலை ப்படைப்பாகும். நாள் தோறும் வைகறையில் இந்த லிங்கத்திற்கு செய்யப்படும் பூசனை மிகவும் சிறப்பானதொன்று. தீப ஆராதனையின் பொழுது இந்த லிங்கம் மஞ்சளும் சிவப்பும் கலந்த வண்ணக் கலவையாக காட்சி அளிக்கின்றது. நாழி (ஒன்றரைப்படி) குறுணி (ஆறுபடி) என்ற முகத்தல் அளவும், ○ பணம், அரைப்பணம், பதினைஞ்சு பணம் என்ற நாணய வகையும் இந்த செப்பேட்டில் குறிக்கப்பட்டுள்ளது. == - 3. Indian Antiquary (1883) pp. 317.