பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 157 மற்றும் வரிகள் 27 முதல் 33 வரையான வரிகளில் சந்திராதித்தர்' சந்திரப்பிரவேசம்' அபிமானிச்சு' கெங்காஸ்நானம்' சுகுர்தம் கன்னியாதான பலன்' அக்கிரகாரம் தோஷம் விருமகத்தி' என்ற வடசொற் கள் விரவி இருப்பதுடன், அவை இந்த வட்டார பேச்சுவழக் கில் அப்பொழுது புகுந்து ஒலித்த மணிப்பிரவாளம் என்பதும் தெரியவருகிறது. சேதுபதி மன்னருக்குள்ள சிறப்புகள் எல்லா இராமனாத சுவாமி வழங்கியவையென்று மன்னர் உணர்ந்ததால், மிகுந்த பயபக்தியுடன், இந்த தானத்தை, இராமனாத சுவாமிக்கு நன்றிக்கடனாக - மன்னர் உத்தரவிட்டுள்ளார். இந்த தானத் தில் கட்டுப்பட்டுள்ள கிராமத்தை தெய்வ சிந்தனையுடன் வளப் படுத்தியவர்களுக்கு, கங்கையிலே கோடிமுறை குளித்து எழுந்த புண்ணியமும், கோடிமுறை தனுஷ்கோடியில் சேது தீர்த்தமாடிய சுகிர்தமும், கோடி கன்னிகாதானம் கோடி பூதானம் செய்த பலனும் பெறுவார்கள் என்பதை வரிகள் 33-37 உணர்த்து கின்றன. எண்ணிக்கையில் கோடிக்கு மேலாக தமிழ் நெடுங் கணக்கு இல்லையாதலால் கோடி, கோடி என்ற சொல் பலமுறை விரவி வந்துள்ளது. இதற்கு எதிர்மறையாக இந்தமானியத்திற்கு அகிதம் பண்ணினவர்கள், புனிதமிக்க கங்கைக் கரையில் காராம் பசுவைக் கொன்ற பாவத்தில் உழல்வார்கள் என்பதும் நேரடியாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகிர்தம், அகிதம், தீர்த்தம், கன்னியாதானம், பூதானம் அக்கிரகாரம், பிருமகத்தி, தோஷம் ஆகியவை வடசொற்கள்.