பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/186

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமலை சேதுபதி (கி. பி. 1646 - 1678) மறவர் சீமை மன்னர்களில் மிகச்சிறந்த வரலாறு படைத் தவர் இந்த மன்னர். முப்பது ஆண்டு காலம் நீடித்த அவரது அமைதியான ஆட்சி, தமிழ் மொழியின் ஆக்கத்திற்கும் தெய் வீகத் திருப் பணிகளுக்கும் தோற்றுவாயாகத் திகழ்ந்தது. இரா மேசுவரம் திருக்கோயிலின் இரண்டாம் பிரகாரம் இவரால் அமைக் கப்பட்டது. இன்னும், இராமநாதபுரம் ராஜ துர்க்கை அம்மன் கோயில், வனசங்கரி அம்மன் கோயில், திருப்புல்லாணி தர்ப் பாசன மழகியார் திருக்கோயில் - மேலச்சிறுபோது மலைவளர் காதலியம்மன் ஆலயம், ஆகியவைகளை அமைத்ததுடன் இரா மேசுவரம் மற்றும் சில கோயில்களில் அன்றாட பூசனைகளும் விழாக்களும் நிகழ்வுற ஐம்பது ஊர்களை இறையிலியாக வழங் கினார். இன்னும், சேதுவழிப்பாதையில் இராமேசுவரம் வந்து திரும்புகின்ற பயணிகளது பயணக்களைப்பும் பசியும் தீர்ப்பதற் காக பல அன்ன சத்திரங்களையும் நிறுவினார். இராமேசுவரம் நகரிலேயே தங்கி இருந்து திருப்பணிகளை கண்ணும் கருத்துமாக கவனித்து வந்ததால் அவரை மக்கள் இராமேசுவரத்தையா’’ என அழைத்தனர்.