பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/187

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் T 61. - சமயப்பணிகளில் இருந்த சிரத்தையும் ஈடுபாடும் காரண மாக தெய்வத்தமிழுக்கும் தொண்டு செய்ய முனைந்தார். அப் பொழுது அரிய புலமைபெற்று இருந்த மிதிலைப்பட்டி அழகிய சிற்றம்பலக் கவிராயரையும் தமது அவைக்கு வரவழைத்து பொன்னும் பொருளும் வழங்கிப் போற்றினார். சேது மன்னரது சோற்றுச் செருக்கால் செம்மாந்து நின்ற புலவர் பெருமக்கள்; துறைதோறும் தமிழ்வளரத் தொண்டு செய்தனர். ஒருதுறைக் கோவை, தளசிங்கமாலை, மருதுார் அந்தாதி ஆகிய தமிழ் இலக் கியப் படைப்புகள் அவரது தமிழ்க் கொடைக்குச் சான்றாக மலர்ந்தன. இந்த மன்னரது செம்மையான ஆட்சி பினால் சேது நாட்டு எல்லைகள் விரிந்தன. வடக்கே கானாட்டையும் கடந்து திருச் சிராப்பள்ளி வரையும், வடகிழக்கே சோழநாட்டை ஊடுருவி திருவாரூர் வரையும், இந்த எல்லைகள் தொட்டு நின்றன." இத்தகைய வலிமையான மறவர்நாட்டின் வளர்ச்சி மதுரை மன்னர் திருமலை நாயக்கரது கண்களை அழுக்காறால் மறைத் தது. ஏற்கனவே, மறவர்சீமை அரசியலில் தலையீட்டு புனித பூமியான, இராமேசுவரம் தீவை போர்க்களமாக்கினார். இரண் டாவது சடைக்கன் சேதுபதியை மதுரையில் சிறையிலிட்டார். பின்னர், மக்களது எதிர்ப்பிற்கு அஞ்சி அவரை விடுதலை செய்தார். மீண்டும், இந்த மன்னரது ஆட்சியின் பொழுது மறவர்சீமையை துண்டாடுவதற்கு முயன்றார். அந்தணர் நூற்கும் அறத்திற்கும் ஆதியாய் நின்ற இந்த மன்னனது கோலினை அகற்றுவதற்கு முயன்றார்; இயலவில்லை. ஆனால் திருமலை மன்னருக்கு ஏற்பட்ட இன்னல்களை சேதுபதி மன்னர் நீக்கி மகிழ்ந்தார். இன்னா செய்தார்க்கும் இனியவை செய்தல்' என்ற தமிழ் மறைப்படி மதுரையைச் சூறையாடி வந்த குத்ப் கானது வடவர் படைகளையும் புறமுதுகிட்டு ஓடும் படி செய்த துடன் மதுரை மன்னர் நலிவுற்று படுக்கையில் கிடந்த நிலை யில் மதுரையைக் கைப்பற்ற வந்த மைசூர் மன்னரது படை களை திண்டுக்கல்லுக்கு அருகில் நடந்த போரில் துவம்சம் செய்ததுடன் எஞ்சியவர்களை மைசூர் எல்லைக்குள் துரத்தியடித் 1. Pudukottai State Inscriptions (1928) அமுத கவிராயர் - ஒரு துறைக்கோவை பக்கம் 38.