பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/189

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. 11. 12. செப்பேடு எண். 10 (நகல்) ஸ்வஸ்திபூரீ சாலிவாகன சகாப்தம் 1570 இதன்மேல் செல்லா நின்ற சர்வ சித்து வருஷம் மாசி மாதம் சோம வாரமும் பஞ்சமியும் சுவாதி நட்சத்திரமும் செளபாக்கிய நாம யோகமும் வால வாகனமும் பெத்த சுபயோக சுபதினத்தில் தேவை நகராதிபன் சேதுமூல ரட்சா துரந்தரன் இராமநாத சுவாமி காரிய துரந்தரன் சிவ பூசா துரந்தரன் பர ராஜ கெச சிங்கம், சொரிமுத்து வன்னியன் மகா மண்டேலேசுரன் அரிய ராய தல விபாடணன் பாசைக்கு தப்புவார் கண்டன், மூவ ராய கண்டன் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான் பட்டமானம் காத்தான் துவிடிடராயிர கண்டன் புவனேக வீரன் வீர கஞ்சுகன் வீர வள நாடன் வேதியர் காவலன் அரச ராவண ராமன் பாதாள விபாடன் அந்தம்பர கண்டன் சாடிக்கார கண்டன், சாமி துரோகியள் முண்டன், பஞ் சவர்ண ராய ராவுத்தன் பனுக்குவார் கண்டன், வையை வளநாடன் கொட்ட மடக்கி இவ லி மிதித்து ஏறுவார் கண்டன் வீர வெண்பாமாலை இளஞ்சிங்கம், தளஞ்சிங்கம் பகை மன்னர் சிங்கம் மதுரை ராயன் ஆத்துப் பாய்ச்சி, கடலில் பாய்ச்சி, மதப்புலி நூலாசிரியரது கன ஆய்வின் பொழுது கண்டுபிடித்து படி எடுத்தது.