பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 10 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி மன்னர். 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் ஆதினகர்த்தர் இராமனாத பண்டாரம். 3. செப்பேட்டின் காலம் சாலிவாகன சகாத்தம் 1570, சர்வசித்து ஆண்டு மாசி மாதம் (A.D. 1647). 4. செப்பேட்டின் பொருள் : இராமேசுவரம் பூரீ இராமனாத சுவாமி - பர்வதவர்த்தினி அம்மன் பூசை நை வேத்தியம் ஆவணி மூலத்திரு நாள் விழாச் செலவுகளுக்கு முகிழ்த்தகம் கிராமம் தானம். இந்தச் செப்பேட்டில் திருமலை ரகுநாத சேதுபதி மன்ன ரைப்பற்றிய அறுபது விருதாவளிகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் முந்தைய உடையான் சடைக்கன் சேதுபதி தளவாய் கூத்தன் சேதுபதி மன்னர்களது செப்பேடுகளில் பொறிக்கப் பட்டுள்ள விருதாவளிகளுடன் கூடுதலாக பரராஜ செயசிங்கம், அந்தப்பிரகண்டன், பனுக்குவார் கண்டன், ஆரியர் மானங்காத் தான், குன்றில் உயர் மேருவை குன்றாய் வருகினில் பொசித்த வன், கலைதெரியாவிற்பன்னன் என்ற ஆறு புதிய விருதாவளிகள்