பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/200

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 11 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி மன்னர். - 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் திருக்கோயில் ஆதினகர்த்தர், இராமநாதபண்டாரம் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1573 நந்தன ஆண்டு தை மாதம் கி.பி. 3-1-1653 4. செப்பேட்டின் பொருள் ; சேதுபதிமன்னரது விளக்க உத்தரவு. இந்தச் செப்பேட்டில், வரிகள் 3-14 வரையில் சேதுபதி மன்னரது முப்பத்தைந்து விருதுகள் பொறிக்கப்பட்டுள்ளன. இவைகளில் பூறுவ தெகூழின பச்சிம உத்திர சமுத்திராதிபன்’ என்ற ஒரே ஒரு விருதினைத் தவிர, ஏனையவை ஏற்கனவே இந்த மன்னரது செப்பேட்டிலும் (செப்பேடு எண்.10). அவரது முந்தையோரான உடையான் சடைக்கன் சேதுபதி அவரது மகன் தளவாய் சேதுபதி என்ற கூத்தன் சேதுபதியின் செப்பேடுகளில் (செப்பேடு எண் 1 முதல்9) காணப்படுகின்றவை இந்த மன்னரது செம்மையான ஆட்சி காரணமாக சேது நாட்டின் எல்லைகள் வடக்கிலும் வடகிழக்கிலும் சோழ சீமைக்குள்ளும் தெற்கே திருநெல்வேலிச் சீமை மன்னர் கோயில் வரையிலும் விரிந்து பரந்ததால் பூர்வ - தெற்கு, கிழக்கு, வடக்கு சமுத்திரங் களுக்கு தலைவர் என்ற விருது உயர்வு நவிற்சியாக வரையப்பட்டுள்ளது. மற்றும், இந்தச் செப்பேட்டை வழங்கியவர் தளவாய் சேதுபதி காத்த தேவரவர்கள் புத்திரன் திருமலைச்