பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 175 சேதுபதி' என (வரிகள் 15-16ல்) குறிப்பிடப்பட்டு ள்ளது. தளவாய்' என்ற பட்டம் கி.பி.1605ல் மதுரை முத்துக் கிருஷ்ணப்ப நாயக்க மன்னரால் உடையான் சடைக்கன் சேதுபதிக்கு முதலில் வழங்கப்பட்டாலும், பின்னர் அவரது புத்திரரான கூத்தன் சேதுபதிக்கும் (கி.பி.1622-35) அடுத்து அவரது சகோதரன் இரண்டாவது சடைக்கன் சேதுபதிக்கும் (கி.பி.1635-46) இருந்து வந்துள்ளது. . இந்த சேதுபதி மன்னர், முந்தைய சேதுபதிகளான கூத்தன் சேதுபதி, இரண்டாவது சடைக்கன் சேதுபதி ஆகியோரது தங்கை மகன் என்பது வரலாறு: இராமேசுவரம் திருக்கோயில் வழிபாட்டு முறைகளுக்கான நியதிகளையும் அதற்கு தேவையான நிதி வசதியையும் முதலில் ஏற்படுத்தியவர் 'உடையான் சடைக்கத் தேவர்' என்பதை முன்னர் பார்த்தோம் (செ. எண்.1) அவர், அந்தக் கோயிலில் இரண்டு விதமான கட்டளைகளை ஏற்படுத்தினார். அவை * கோயில் உள்துறைக்கட்டளை என்றும் அறைக்கட்டளை என்றும் பெயர் பெறும் இந்த உள்துறைக் கட்டளை என்பது சேதுபதி மன்னர் ஆதியில் வழங்கிய பொருள் உதவியைத் கொண்டு பின்னர் பக்தகோடிகளது காணிக்கை, இதர உபயங் களைக் கொண்டும், அன்றாட வழிபாட்டிற்கு பயன்பட்டு வருவது. சேதுபதி மன்னர் சிறப்பாக அணிமணிகளையும், பொருள்களை யும், கிராமங்களையும் பூரீஇராமநாத சுவாமியின் சிறப்பு பூசனை களுக்காக வழங்கி, அவ்வப்பொழுது நடைபெறும் திருவிழா போன்ற சிறப்பான நிகழ்ச்சிகளுக்கு பயன்பட நிறுவப்பட்டது அறைக்கட்டளை. இந்த இரு கட்டளைகளும், எவ்வித மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து நடைபெற வேண்டும் என்பதில் சேதுபதி மன்னர்கள் கண்ணுங்கருத்துமாக இருந்து வந்தனர் என்பதை அவர்களது செப்பேடுகள் தெரிவிக்கின்றன. கி.பி. 1627ல் மறவர் சீமை மன்னராக இருந்த கூத்தன் r சேதுபதி என்ற தளவாய் சேதுபதி, இராமேசுவரம் கோயில் ஆதின கர்த்தர் இராமனாத பண்டாரத்திற்கு வழங்கிய 1 - Raja Ra n R ovv-T- Manual of Ramnad Samas thanam (1891) р. 2.21-222, 2. Pedigiree filed by Sivakamni Nachiyar no O. S. 3/1813 cf the Projvincial court