பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 12 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரெகுநாத சேதுபதி காத்தத்தேவர் அவர்கள், 2. செப்பேடு பெற்றவர் : செளமிய இராமைய்யன் புத்திரன் அகோபலைய்யன் 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாப்தம் 1579 விளம்பி ஆண்டு கி.பி. 1657 4. செப்பேட்டின் பொருள் : காளையார் கோயில் சீமையில் ஏழு கிராமங்கள் தானம் இந்தச் செப்பேட்டை வழங்கிய சேதுபதி மன்னரது விருதாவளியாக ஐம்பத்தியொரு சிறப்புப் பெயர்கள் கொடுக்கப் பட்டுள்ளன. இவைகளில் பதினெட்டு பாளையக்காரர் மிண்டன், ஆணைக்குத் தேவேந்திரன் என்ற இரண்டு விருதாவளிகளும் இந்தச் செப்பேட்டில் புதிதாக இடம் பெற்றுள்ளன. இதனை வரைந்தவர் கிரந்த எழுத்துக்களில் மிகவும் பயிற்சியுடையவராகத் தெரிகிறது. பல இடங்களில் தமிழ் எழுத்துக்களை புரிந்து கொள்ள இயலாதவாறு உள்ளன. இந்தச் செப்பேட்டைப் பெற்றவர் கெளண்டின்ய கோத்திரத்து செளமிய இராமைய்யன் புத்திரன் அகோபலையன் என்பதாகும். இவர் கெளண்டின்யர் என்ற இருடியை தமது சந்ததி முதல்வராக கொண்டவர் பொதுவாக தமிழ்நாட்டு ஆரியர்கள் அனைவரும் அவர்களது கொள்வினை கொடுப்பினை போன்ற சமூக சடங்குகளுக்கு இந்தச் சந்ததி முறையைப் பேணி வருவது யாவரும் அறிந்த ஒன்று.