பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் --- 137 என்ற விருது ஆந்திரநாட்டு வாரங்கல் (ஒரங்கல்) பகுதியில் அரசுரிமை பெற்று இருந்த காரணத்தால் தெலுங்கு மன்னர் களுடையனவாகவும் இருந்து அவர்களின் தளவாயான சேதுபதி களுக்கும் அதே விருதுகள் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. தெலுங்கு நாட்டு வாரங்கல் அல்லது ஒரங்கல் நகரம் எக்சிலா நகரி எனப்பட்டது. அதன் மன்னன் என்ற பொருளில் இங்கு பயன்படுத்தப்பட்டுள்ளது. மற்றும் வையாளி நாராயணன் என்பது பூரீரங்கம் பெருமாளைக் குறிப்பிடுவது. ஏனெனில் இந்த பெருமாள், ஓராண்டில் ஏழு முறை சித்திரை வைகாசி, புரட்டாசி மார்கழி, தை, பங்குனி, மாதங்களில் குதிரை வாகனத்தில் (வையாளியில்) பக்தர்களுக்கு காட்சியளிப்பது, வழக்கமாக இருந்தது.' இதனை கோண வையாளி என் . சொல்வதுண்டு. இந்த விழாவினை முதன் முறையாக கி.பி 1383ல். அறிமுகபடுத் தியவர் விருபாட்சி நாயக்கர் 'வையாளி விடுதல்' * 'வையாளி விதி என்பனவெல்லாம் இததையொட்டி வந்த வழக்குகள். மற்றும், தமிழகத்தில் அரபுக் குதிரைகள் இறக்கத்தையொட்டி பன்னிரண்டாம் நூற்றாண்டின் ஏற்பட்ட இந்த மரபு நாளடை வில் பரிவேட்டையாக (பாரிவேட்டை என்று சில இடங்களில்) இன்றும் தொடர்ந்து வருகிறது. அதன் பொருளும் போக்கும் மாறுபடும்படியாக மக்கள் ஒரு குறிப்பிட்ட நாளில் குழுவாகச் சென்று வேட்டையாடுவதாக உள்ள வழக்கம் சில ஊர்களில் இருந்து வருகிறது. இதனைத் திருவிழாவாக பூரீரங்க ஆலயத் தில் நடத்துவதற்கு தக்க விளைநிலங்கள் கி.பி. 1555-ல் விஜய நகர மன்னர் சதாசிவராயரால் தானம் வழங்கப்பட்டது. திருவரங்கத்துப்பெருமாளது பெயர், திருமலை, சேதுபதி மன்னரது விருதாக, எவ்விதம் அமைந்தது என்பதைத் துலக்க ஆவணம் எதுவும் இல்லை. இந்தச் செப்பேட்டில் காணப்படுகிற புதிய விருது அடியார் வேளைக்காரன்' என்பது தொண்டருக்குத் தொண்டராகத் துணை நிற்பவர் என்ற பொருளில் இந்த விருது, இந்த மன்னருக்கு ஏற்பட்டு இருக்க வேண்டும். இராமேசுவரம் பூரீ இராமநாத சுவாமியைத் தரிசிக்க வேண்டும் என்ற சிறந்த குறிக்கோளுடன் இந்திய நாட்டின் பலபகுதிகளில் இருந்தும் 1. Chitra Viji – South Indian Studies – Vol II pp. 171–172