பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/214

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188 எஸ். எம். கமால் இராமேசுவரம் நோக்கி வருகின்ற பல்லாயிரக் கணக்கான பக்த கோடிகளுக்கு பல்லாற்றானும் பணிசெய்யும் பாக்கியத்தை சேது மன்னர்கள் பெற்று இருந்தனர். இராமநாதபுரம் சீமையின் வடக்கு எல்லையான கோட்டைப்பட்டினத்தில் இருந்தும் தெற்கு எல்லையான வேம்பாற்றைக்கடந்தும் இராமேசுவரம் நோக்கி வருகின்ற பயணிகளுக்கு பயணக்களைப்பு நீங்க, ஒய்வு பெற்று உணவுபெற, பத்துக்கல் தொலைவிற்கு ஒரு அன்ன சத்திரம் என்று பல சத்திரங்களை நிர்மாணித்து அங்கே, பயணிகளுக்கு மூன்று நாட்கள் வரையிலும் உண்டியும், உறையுளும், இலவச மாக வழங்க ஏற்பாடு செய்துவந்தனர். மேலும் கங்கையைக் கடப்பதற்கு, இராம இலக்குமணருக்கு பரிசல் ஒட்டி பாத சேவை செய்த குகனைப் போன்று, இராமேசுவரம் பயணிகள் வையை ஆற்றைக்கடப்பதற்கு ஆற்றங்கரையிலும், பாம்பன் ஆற்றைக் கடப்பதற்கு பாம்பன் மண்டபம் இருகரைகளிலும் படகுகளை ஏற்பாடு செய்து இருந்தனர். இத்தகைய தொண்டுகளுக்கு துணையாக இருந்த அடியார் வேளைக்காரரான இந்த மன்னருக்கு இந்த விருது வழங்கப்பட்டதில் வியப்பு ஒன்றும் இல்லை. இத்தகைய விருதாவளிகள் உண்மையை உள்ளடக்கிய வனாக இருந்தாலும் காலப்போக்கில் அவைகளைக் கருது பவர்கள் இல்லாத காரணத்தினால், அதன் விவரங்கள் நமது ஆய்வுக்கு கிடைப்பது இல்லை. மற்றும் வேளைக்காரன் என்ற சொல் பதினொன்று பன்னிரண்டு நூற்றாண்டு கல்வெட்டுக்களில் காணப்படுகின்றது. 'மூன்று கை வேளைக்காரர்' என்ற சொல் கோயில் பணி களைக் கண்காணிப்பதற்காக சோழப் பேரரசர்களால் நியமனம் செய்யப்பட்ட பணியாளர்கள் என்பது தெரிகிறது. மேலும். இலங்கை நாட்டின் வடகிழக்குப்பகுதி, சோழர்களால் கைப்பற்றப் பட்ட பொழுது புத்தசமய நாடான அங்கு தமிழகம் போன்று திருக்கோயில்கள் எழுந்தன. அங்கும் இந்த வேளைக்காரர்' நியமனம் செய்யப்பட்டனர். அந்தக் கோயில்களின் பாதுகாப்பு பொறுப்பு அவர்களிடம் ஒப்படைக்கப்பட்டு இருந்தது என்றும் அவர்கள் சைவர்களாக இருந்தனர் என்றும், கோயில் காணிக் கையில் ஒரு பகுதி அவர்களைச் சேர்ந்ததாக இருந்தது என்றும் அந்த நாட்டுக் கல்வெட்டுக்களில் இருந்து தெரிய வருகின்றன. 9 لـ 3. Ephigraphica Zailamica Vol Il p. 242 VoI. IV p. 191