பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/215

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 189 இத்தகைய வேளைக்காரர் கல்வெட்டு என வழங்கப்படும் தமிழ்க் கல்வெட்டு ஒன்று இலங்கை பொலன்னருவாவில் துாபரமா втбтут " அழைக்கப்படும் சிதைவுற்ற L |த்த சைத் ரத்துக்குப்பக்கத்தில் பொறிக்கப்பட்டிருப்பதை இன்றும் காண லாம். இதில் வேளைக்காரது பணிகள் விளக்கமாகப் குறிக்கப் பட்டுள்ளன. இந்தப் பணியாளர் முறை பின்னர் வைணவக் கோயில்களிலும் பின்பற்றப்பட்டது என்பதற்கு திருப்புல்லாணி திருக்கோயிலின் கி. பி. 1374-ம் ஆண்டு கல்வெட்டில் திரு வேளைக்காரரைக் கொண்டு ' என்ற தொடர் சான்றாக உள்ளது." இந்தச் செப்பேடு வழங்கப்பெற்ற பதினேழாம் நூற்றாண் டில், இராமேசுவரம் திருக்கோயிலின் அன்றாட திருப்பணிகளில் ஈடுபட்டு இருந்தவர்கள், மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த அந்தணர்கள். அவர்கள் தனிக்குழுவாக இருந்த காரணத்தி னால் அவர்கள் சவையார் (சபையார்) என இந்தச் செப்பேட்டில் (வரி 10) குறிக்கப்பெற்றுள்ளனர். அவர்கள் கோயிலில் பூஜை சுயம்பாகம், பரிகாரம் ஆகிய பணிகளைச் செய்து வந்தனர், அவர்களில் முக்கியமானவர் சங்கர குருக்கள். இவருக்கும்' ஏனைய மராட்டகாள குருமார்களுக்கும், அவர்களது பணிக்கான ஊதியம் எதுவும் வழங்காததாலும் அதற்கு ஈடான விளை நிலங்களையும் வழங்காததாலும், திருமலை சேதுபதி மன்னர் அதனை முன்னிருந்த ராசாக்கள் உங்களுக்கு அர்ச்சனா பாகத் திற்கு, கிராமம், பூமி விடாததினாலே. . . (வரி 10) என்று குறிப்பிட்டு, இராமேசுவரம், சேது ஸ்நானம், சுவாமி தரிசனம் ஆகியவைகளுக்காக வருகின்ற மராட்டிரர்களுக்கும், இன்னும், சகல பிரிவினர்களுக்கும், தீர்த்தம், புரோகிதம், செய்து வைத்து அதில் கிடைக்கும் வருவாய்களை அனுபவித்துக் கொள்வதுடன், அவர்கள் திருக்கோயில் பணிகளையும் செய்து கொள்ளும் உரிமை யினை மன்னர் இந்தச் செப்பேட்டின் மூலம் சங்கர குருக்களுக்கு வழங்கி உத்திரவிட்டுள்ளார். அந்த இறை பணியாளர்கள், தங்களது திருப்பணியை இடையூறு எதுவும் இல்லாமல் தொடர்ந்து மனநிறைவுடன் நிறைவேற்ற வேண்டும் என்ற 4. K. K. Play - Sri Lanka and India (1975) p. 80 5. திருப்புல்லாணி. A. R. 114/1903.