பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

190 எஸ். எம். கமால் = நல்ல நோக்கில் அந்த ஆணையை வெளியிட்டுள்ளார். ஆதலால், மன்னர் இந்த தான சாசனத்தை, மகாதர்ம சாசனம் (வரி 14) என்றும், இதனை மன்னரது வழியினர் அவசியம் மதித்து நடக்க வேண்டுமென்பதற்காகவே நம்மிட வம்சத்தில் உண்டான பேர்கள்’ (வரி. 12) எனத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். இது சேதுபதி மன்னரது சாதாரண ஆணையாக இருந்தாலும், பக்தர்களது பக்திப்பரவச வளர்ச்சிக்குப் பயன்பட, திருக்கோயில் திருப்பணியாளர்களது தொண்டு சிறக்க, அவர்களது வாழ்க்கை நிலை நிறைவாக அமைய வேண்டும் என்ற பேருண்மை தான் இந்தப்பட்டயத்தில் பிரதி பலிக்கின்றது. இந்தப் பட்டயம், வேதவித்தகர்களான அந்தணர்களுக்கு வழங்கப்பட்ட ஆணையாதலின், வடமொழிச் சொற்கள் மிகுந்து காணப்படுகின்றன. குருக்கள், தீர்த்தம், புரோகிதம், சுவாமி பூஜை, சுயம்பாகம் பரிகாரம், சுவாமி தெரிசனம், சகலசாதி பரிஷைகள், சந்திராதித்ய சந்திரப்பிரவேசம், மகாதர்ம சாசனம் பரிபாலனம், கோடி சிவலிங்க பிரதிஷ்டை, கோடி அக்கிரகாரம் அகிதம், தோஷம், ஸஹறிரண்ணிய ஸாதக தாராபூர்வம் சேதுஸ் நானம் என்பன அவை. இந்தப் பட்டயத்தில் சேதுபதி மன்னர், தமது பெயரான ரகுநாதத் தேவர் என்பதுடன், சேது என்ற சொல்லையும் சேர்த்து இணைத்து சேதுபதி சேது ரகுநாதத் தேவரவர்கள் எனப் பணிவுடன் கைச்சாத்துகிட்டிருப்பது இராமேசுவரம் பால் அவருக்குள்ள ஈடு இணையற்ற பக்திப் பெருக்கைக் குறிப் பிடுவதாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் இராமநாதபுரம் மன்னர் சேது ரகுநாதத் தேவர் எனவும் வழங்கப் பட்டார். இதனை உறுதி செய்வது போல, தேவகோட்டை கல்லுப்பட்டி கிராமத்திற்கு வடமேற்கே சேதுரகுநாத பட்டணம் என்ற சிற்றுார் இருந்து வருகிறது. இந்தப் பட்டயத்தை கீளக் கொடுமலூரில் இருக்கும் இலங்கை மீட்டாபிள்ளை மகன் தாண்ட வராயன் என்பவர் வரைந்துள்ளார். அவரது கையெழுத்துடன் ராயசம்' என்ற சொல் காணப்படுவதில் இருந்து, மதுரை மன்னர்கள் பணியினைப் போல சேதுபதி மன்னர் பணியிலும் ராயசம்'. (செயலர்) என்ற பதவி இருந்தது தெரியவருகிறது கீழக் கொடுமலூர் முதுகுளத்துார் வட்டத்தில் உள்ளது. இந்த குடியிருப்பு முழுவதும் தற்பொழுது அரிசனமக்கள் வாழ்ந்து வருகின்றனர். பிற இனத்தவர் யாரும் இப்பொழுது அங்கு இல்லை.