பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண் 14 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை சேதுபதி என்ற ரகுநாத சேதுபதி 2. செப்பேடு பெற்றவர் : இராமேசுவரம் சதாசிவபட்டர் புத்திரர் சங்கர குருக்கள். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1580 ஏவிளம்பி ஆண்டு ஆடி மாதம் (கி.பி. 1658) 4. செப்பேட்டின் பொருள் : இராமநாதபுரம் ராஜராஜேஸ்வரி அம்மன் நவராத்திரி உத்சவம் பூஜை செய்யும் உரிமைப்பட்டயம். இந்தச் செப்பேட்டில் சேதுபதி மன்னரது அறுபத்து ஒன்பது விருதுகள் வரிசையிட்டு கொடுக்கப்பட்டுள்ளன. ஆனால் மூன்று விருதுகளை ஓரிடத்தில் ஒன்றாக இணைத்துக் கொடுக்கப் பட்டுள்ளன. அதாவது. 1. கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாதான். 2. பட்டமானங் காத்தான். 3. துட்டராகிய கண்டன். என்ற மூன்று விருதுகளும் செப்பேட்டு வரி 3ல் கண்ட நாடு கொண்டு கொண்ட நாடு கொடாத, பட்டமானங்காத்த துட்ட ராகிய கண்டன்' என ஒரே விருதாக கொடுக்கப்பட்டுள்ளது. இன்னும் ஏற்கனவே முந்தைய பட்டயங்களில் கொடுக்கப்பட்ட இரண்டு விருதுகள், சற்று மாற்றத்துடன் பொறிக்கப்பட்டுள்ளன. அதாவது, 'இவளிபாவடி மிதித்து ஏறுவார் கண்டன் என்பது இவளி பாவடி மிதித்தெண்டுவார் கண்டன் என்றும், சத்திய பாஷா