பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 197 சேதுபதிமன்னருக்கு பலவாறு சிறப்புகள் செய்து பாராட்டியதுடன் பொன்னாலான ராஜராஜேசுவரி அம்மன் சிலையொன்றையும் அன்பளிப்பாக வழங்கினர் . இராமநாதபுரம் அரண்மனைக்குள் கொற்றவைக்கு கோட்டம் ஒன்று அமைத்து அங்கு அந்த திருமேனியை வைத்து வழிபட்டதுடன், ஐப்பசி மாதம் தோறும் மதுரையில் நடப்பது போன்று நவராத்திரி விழாவும் நடத்தி வந்தார். இந்த விழா மறவர் சீமைக்குப் புதிய தாகையால், அதனை முறைப்படி நடத்தி வைப்பதற்காக இராமேசுவரத்தில் இருந்த சங்கர குருக்களைத் தேர்வு செய்து நியமனம் செய்தார். ராசராசஈசுவரி அம்மன் நவராத்திரி உட்சொபத்துக்கு, நமக்கு காப்பு தரிச்சு, தாமும் காப்பு தரிச்சுக் கொண்டு நவராத்திரி பத்துனாளை உட்சொபத்துக்கும் இராச ராசாஈசுவரி அம்மனுக்கு பூஜை பண்ணி, உட்சொபம் செய்து அதில் வருகிற ஊதியமும் தாமே அனுபவிச்சுக் கொண்டு தமக்கு காணியாட்சி யாக நடந்து வரவேண்டியது, என்பது சேதுபதி மன்னரது ஆணை. இந்த ஆணை ஆதிசந்திராதித்த சந்திரப் பிரவேசம் வரை, புத்திர பவுத்திர பாரபரியந்தரம் வரை செல்லத்தக்கதாக இருக்க வேண்டுமென்பதும், சேதுபதி, மன்னரது உள்ளக்கிடக்கை. அதற்காக, இந்த ஆணையை சேதுபதி மன்னர், மிகவும் புனித நாளான பூரண ஆடி அமாவாசை நாளன்று (கி.பி.1659ல்) சேதுக்கரை பில், இந்தப்பட்டயத்தை எழுதச் செய்து கைச்சாத்து இட்டுள்ளார். ராயசம் அளகப்பன் என்பவர் இந்தப்பட்டயத்தை வரைந்துள்ளார். மன்னரது உத்திரவில் கண்ட காணியாட்சி (வரி 12) என்பது பரம்பரை உரிமை என்ற வழக்கில் பயன் படுத்தப்பட்டுள்ளது நவராத்திரி பத்துநாள் உட்சபம் (வரி11) எத்தகையது என்பதும் எவ்வித நிகழ்ச்சிகள் அப்பொழுது இடம் பெற்றன என்பதற்குமான விளக்கம் இல்லை. ஆனால் கி.பி1892ல் இராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழாபற்றிய விளக்க குறிப்பு ஒன்றில் இருந்து அதற்கு முந்தைய நூற்றாண்டுகளில் இராமநாதபுரம் அரண்மனையில் நடைபெற்ற நவராத்திரி விழா எப்படி இருந்து இருக்கும் என ஊகித்துக் கொள்ள முடிகிறது. 4. Sathianathaier. R H istory of Madura Nayaks. (1924) p. 126 Seshadri. Sethupathis of Ramnad (1972) p. 33 Miniature Hindu Excelsior Series – English. (1892)