பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் - - இவைகளைத் தவிர, இந்தக் கோயிலுக்கு தருமசாதனமாக நிலங்களும் கொடுக்கப்பட்டுள்ளது தெரிய வருகிறது. இராமநாத புரத்திற்கு வடமேற்கே உள்ள சூரன்கோட்டை கிராமத்தில் இருகல் விரையடி நிலமும், இராமநாதபுரத்திற்கு தென்கிழக்கே உள்ள சக்கரக்கோட்டை ரெகுநாதமடைப் பாசனத்தில் இருகல் விரையடி நிலமும், அல்லிக்குளம் கிராமம் முழுமையும் சர்வ மானியமாகவும் வழங்கப்பட்டுள்ளது, தெரியவருகிறது. விரையடி என்பது விதை அடி என்பதன் திரிபு, இந்த வட்டாரவழக்கு. இருகல் விரையடி என்பது ஒரு நூற்று என்பதுபடி விதை நெல்லை வித்திடக் கூடிய நஞ்சை நிலப்பரப்பு பதக்கு (பத்துப் படி) கையெடுப்பு (ஒருபிடி) காசெடுப்பு (காணிக்கைப்பணம்) உக்கிராணம் (சேமிப்பு அறை) நெசவன்தறி (நெசவுத்தறி) அன்பது (ஐம்பது) வலைதோணி (மீன் பிடிக்க உதவும் படகு) ஆகிய செற்களும் இந்த வட்டாரத்திற்கே உரிய அரிய வழக்குகள் மேலும் இராமநாதபுரம் சீமையில் அப்பொழுது நெசவுத் தொழிலில் பட்டு நூல்காரர்கள் மட்டும் அல்லாமல். முஸ்லீம்கள்(துலுக்கர், சோனகர்) இளம் பஞ்சுக்காரன், வள்ளுவன், பறையன் ஆகிய பிரிவினரும் ஈடுபட்டு இருந்தனர். என்பதையும் இந்தச் செப்பேட்டு மூலம் தெரிந்து கொள்ள முடிகிறது. நெய்யும் தொழிலுக்கு நிகரான தொழில் அப்பொழுது இல்லை என்பதால் சகலபிரிவு மக்களும் இந்த தொழிலில் ஈடுபட்டு இருந்தனர். வடக்கே இருந்து மெதுவாக நகர்ந்து வந்து நாயக்க மன்னர் ஆட்சியில் மதுரையில் நிலையாகத் தங்கிய பட்டுநூல்காரர். பட்டையும், ஜரிகையையும் பயன்படுத்தி விலை உயர்ந்த சிறந்த துணிகளை நெய்து வந்தனர். முஸ்லீம்களது நெசவில் முறி' என்ற வகைத்துணியையும், பறையர் முதலானோர் கம்பளி, போன்ற முரட்டுத்துணி வகைகளையும் அப்பொழுது தயாரித்து வந்தனர். மதுரையைப் பொறுத்த வகையில் பட்டுநூல்காரர்கள்மதுரை கோட்டைக்கு வெளியே கிழக்கே குடியேறினர். முஸ்லீம்கள் கோட்டைக்குள் தென்மேற்குப் பகுதியில் குடியேறிய மூத்த குடிகள். இராமநாதபுரம் கோட்டையைப் பொறுத்தவரையில் மூத்த குடிகள் பட்டுநூல்காரர். கோட்டைக் குள் தென்மேற்குப் பகுதியில் குடியேறினர் பிந்தைய குடிகளான முஸ்லீம்கள் இராமநாதபுரம் கோட்டைக்கு வெளியே கிழக்குப் பகுதியில் குடியேறியுள்ளனர். இவைகளை ஒத்திட்டுப் பார்க்கும்