பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/242

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2 || || தெரியவருகிறது. இதில் நாஞ்சிவயல், நாணாக்குடி ஆகிய ஊர் களில் உள்ள நான்கு ஏந்தல்களின் நீர்பாயும் நிலங்களும். அவைகளின் வகுவாயான பலவரிகளும் இந்த தர்மம் சந்திராதித்யர் வரை நடைபெற ஏதுவாக, இந்த வரிகளை யும், மற்றும் ஆன் அமஞ்சி, உலுப்பை, ஊழியம் ஆகியவைகளை யும் தமக்குசெலுத்தப்படவேண்டியதில்லை. என்று இறையிலி யாக இந்த நிலக்கொடையினை மன்னர் ஆணையிட்டுள்ளார். இதில் குறிப்பிடப்பட்டுள்ள ஆள் (வரி 30) என்பது சம்பந்தப்பட்ட ஊர்களில் இருந்து குறிப்பிட்ட காலங்களில் மன்னரது சேவைக்கு பெறப்பட வேண்டிய கூலி ஆள். அமஞ்சி என்பது மன்னரது சீமை யில் உள்ள நஞ்சை நில விளைச்சலுக்காக செலுத்த வேண்டியது. அமனி என்பது மேல்வாரம். உலுப்பை. ஊழியம் என்பன மன்னரது முடிசூட்டுவிழா போன்ற மங்கல நாட்களில் குடிகள் மன்னருக்கு செலுத்த வேண்டிய அன்பளிப்புகள் ஆகும். இவை யனைத்தும் மறவர் சீமைக்கு மட்டும் பொருந்துவனவாகும். மகேசுவர பூசை என்பது மயேசுர பூசை எனக்குறிப்பிடப் பட்டுள்ளது. சைவசித்தாந்த தத்துவங்களில் ஒன்றான சதா சிவமூர்த்தி, பஞ்ச கிருத்தியங்களைத் தமதுள்ளத்தில் அமைத்து பக்த கோடிகளை அனுக்கிரகிக்கும் அவதாரப்பாங்கு-மகேசுரம். அப்பொழுது சிவன், வெண்ணிற முடையவராய், அரவப்பூசை நூல் அணிந்து, திருக்கரங்களில், வாள், சூலம், பானம், ஜபமாலை, கமண்டலம், அபயம், வரதம், பதுமம் ஆகியவைகளைத் தாங்கி காட்சியளிப்பார் என்று கருதப்படுகிறது . இத்தகைய திருமேனி திருமுன்னர் பாவாடை விரித்து, அன்னம் படைத்து பூசையிட்டு, அதனை அன்பர்களுக்கு வினியோகித்து தாமும் உண்டுகளிக்கும் நிகழ்ச்சி மகேசுர பூஜை எனப்படும். திருக்கோயில்கள் இத்தகைய அன்னம் படைத்து ஆன்ம திருப்தி அடைவதுடன் குடிமக்களது பகிப்பிணியை நீக்கும் இந்த அறச் செயல் நடத்துவதற்காக சோழர்களும் பாண்டியர்களும் தங்களது ஆட்சியில் சந்தி' என்ற நிவந்தங்களை ஆங்காங்கு திருக் கோயில்களில் ஏற்படுத்தி இருந்தனர் என்பது ஈண்டு நினைவு கொள்ளத்தக்கது. 1. சிங்கார வேலு முதலியார் - அ. அபிதான சிந்தாமணி (1912) பக்கம் 1282