பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/245

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 2 || 7 பெற்ற ஆதினகர்த்தர். அம்பலவான பண்டாரம், சித்தர் சிவப் பிரகாசரில் இருந்து தொடங்குகின்ற குரு பரம்பரையில் பதின் மூன்றாமவர் எனக் கருதப்படுகிறது. * செப்பேட்டின் வரி 35ல் கபிலைப்பசு பற்றி குறிப்பிடப் பட்டுள்ளது. கபில நிறமுள்ள பசு என்ற பொருளில் மட்டுமல் லாது, இது தெய்வப்பசு என்பதனையும் இந்தச்சொல் குறிப்ப தாக உள்ளது. பிரமதேவர் இந்தப்பசுவை பூமியில் உள்ள அனைத்து புண்ணிய தீர்த்தங்களைக் கொண்டும், அனைத்து புனிதப் பொருள்களையும் கொண்டு படைத்தார் என்பது ஐதிகம் இந்தப் பசுக்கள் பத்து வகைப்படும் என்பதும், இவைகளின் பால், தயிர், நெய், கோமயம், கோசலம், கோரோசனை அனைத்தும் தேவபூசைக்கு பயன்படுவது மட்டுமல்லாமல்-இவை களின் உடல் முழுவதும் தேவர்களுக்கும் மும்மூர்த்திகளும் உறைவிடமாகும் புனிதம் பெற்றவை. என்ற காரணங்களி னால் பசு_ என்று மட்டுமல்லாமல், கலைப்பசு என இங்கு பொறிக்கப்பட்டுள்ளது. வரி 26ல் சுருபம் பண்ணிக் கொள்ள வேண்டியது என்ற தொடரில் சுருபம் என்பது வடசொல். சொந்தமாக்கிக் கொள்ளுதல் அல்லது கைப்பற்றிக் கொள்ளுதல் என்ற பொரு ளில் வந்துள்ளது. மேலும் இந்தச் செப்பேட்டில், மாதாபிதா வர்க்கத்திற்கு புண்ணியமாக (வரி 21, 22) சன்னதி (வரி 23) பரிபாலனம் (வரி 33) பிரம்மப்பிரதிஷ்டை (வரி 35) பூதானம் (35) கன்னிகா தானம் (வரி 36) சிவலிங்கப் பிரதிட்டை (வரி 36) அன்னதானம் (வரி 37) சிவத்துரோகம் (வரி 44) என்ற வட சொற்களும் பயன்படுத்தப்பட்டு இருப்பதுடன் வரிகளில் 49-50, வடமொழிச்சுலோகம் ஒன்றும் கொடுக்கப்பட்டுள்ளது. 2. சிங்காரவேலு முதலியார் - ஆ. அபிதானசிந்தாமணி (1912, பதிப்பு) பக்கம் 338