பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/249

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செப்பேடு எண். 17 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கியவர் : திருமலை ரகுநாத சேதுபதி

மன்னர்

2. செப்பேடு பெற்றவர் திருப்பெருந்துறை அம்பலத் தாடும் பண்டாரம். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1582 : சார்வரி ஆண்டு மாசி மீ” (கி.பி.1660) 4. செப்பேட்டின் பொருள் : திருப்பெருந்துறை -ՉէճՎடையப்ப சுவாமி திருக் கோயில் பரதேசி கட்ட ளைக்கு உத்திரவு இந்தப் பட்டயத்தை வழங்கிய திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது விருதாவளியாக ஐம்பத்து ஐந்து விருதுகள் இந்தப் பட்டயத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இவைகளில், 1) பகைநாடக சூத்திரப் பிரதாபன் 2) திருமலை நரேந்திரன் மெச்சிய சாமித்து ரோகியள் மிண்டன், சாமித்துரோக வெண்டய காவலன், என்ற மூன்று புதிய விருதுகளைத் தவிர ஏனையவை அனைத்தும் இந்த மன்னரதும் இவரது முன்னோரது செப்பேடுகளிலும் வழங்கப் பட்டவையாகும். திருமலை நாயக்க மன்னரது பகைவரான மைசூர் கூப்கானது பகையினைக்களைந்த காரணத்தினால் முதலாவது விருதும், கி.பி.1658ல் மதுரையைக் கைப்பற்ற வந்த மைசூர் மன்னரது பெரும் படையை, அம்மைய நாயக் கனுரர். திண்டுக்கல் ஆகிய ஊர்களுக்கு அண்மையில் உள்ள