பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

222 எஸ். எம். கமால் போர்க்களங்களில் பொருதி அழித்து வெற்றிவாகை சூடியதுடன் அவர்களில் எஞ்சி உயிர் தப்பி ஓடியவர்களை மைசூர் அரசு எல்லைவரை விரட்டி அடித்து திருமலை மன்னரது பாராட்டிற்கும் பரிசிலுக்கும் உரியவராக விளங்கியதால் இரண்டாவது விருதும் பாண்டிமண்டலத்து எழுபத்து இரண்டு பாளையக்காரர்களுக்கும் தகப்பன் சாமி போல விளங்கிய மதுரை திருமலை மன்னருக்கு எதிராக கலகக் கொடி உயர்த்திய எட்டையபுரம் பாளையக் காரனை வென்று அடக்கி, அவனது தலையினைத் வீரவெண்ட யத்தில் பொறித்து தமது இடது காலில் அணிந்து வந்த காரணத்தினால்’ மூன்றாவது விருதும் புதிதாக சேதுபதி மன்னரது விருதாவளியில் இடம் பெற்றுள்ளன. திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயில் பரதேசி கட்டளைக்கு உட்பட்ட வெள்ளாம் பற்றுச்சீமை, அஞ்சிரண்டுச் சீமை, அறந்தாங்கிச் சீமை, பட்டுக்கோட்டைச் சீமை, புதுக்கோட்டைச்சீமை, திருப்பத்துார், சூரைக்குடிச்சீமை தேர்போகி நாடு. முத்துநாடு, ஆகிய சீமைகளில் உள்ள ஊர் கள் ஏந்தல்கள் - ஆகியவைகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு வசூலிக்கப் பெருகிற பளவரி, கோசாலைவரி, நன்மாட்டுவரி, மகாநவமிகிடாய், மற்றும் சில்லறை வரிகளை வேண்டாமென்று வரி நீக்கம், செய்து உத்தரவிட்ட ஆணையைத் தாங்கியுள்ளது இந்தச் செப்பேடு. மன்னரது இந்த நல்ல நடவடிக்கை மூலம், பரதேசிக் கட்டளையில் சேர்ந்த கிராமங்களில் இருந்து மக்கள் தாராளமாக மன்னருக்கு இறுக்க வேண்டிய கடமைகளை திருப் பெருந்துறை ஆவுடையப்பருக்கு அளித்து பரதேசிக் கட்டளை தருமம் சிறப்பாக நடைபெற ஏதுவாகும் என்பது சேதுபதி மன்னரது எதிர்பார்ப்பு என்பது தெரிகிறது. இதனை ஒரு தர்ம மாக, மன்னரது மூதாதையர் பெற்றோர் - மற்றும் மதுரை திரு மலை நாயக்கர் ஆகியோருக்குப் புண்ணியமாக ஏற்படுத்தப்பட்ட தாக பட்டயம் தெரிவிக்கின்றது வரி (20 - 21). இதில் சம்பந்தப் பட்ட ஊர்கள் இன்றைய புதுக்கோட்டை மாவட்டத்திலும் 1 Sathianathaier – History of Nayaks of Madurai (1928) 2 அமிர்த கவிராயர் - தளசிங்கமாலை