பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/251

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி மன்னர் செப்பேடுகள் 223 (வெள்ளாம்பற்றுச் சீமை, அஞ்சிரண்டு சீமை, அறந்தாங்கிச் சீன ம புதுக்கோட்டை சீமையிலும், தேர்போகி நாடு, முத்துநாடு) திருப்பத்துார் சூரக்குடிசீமை, பசும்பொன் மாவட்டத்திலும் பட்டுக் கோட்டைச் சீமை தஞ்சாவூர் மாவட்டத்திலுமாக அடங்கியுள்ளன. இன்றைய நிலப் பிரிவுகளில் இவைகளில் இருந்து சேதுபதி மன்னருக்கு வருவாயாக கோசாலைவரி, உரப்பிறியல் மற்றும் பல கல்லறை வரிகளும் செலுத்தப்பட்டு வந்த விபரத்தை இந்தச் செப்பேட்டில் இருந்துபுரிந்து கொள்ள முடிகிறது. கோசாலை வரி என்பது மாட்டு மந்தைகள் வைத்து இருப்பதற்கான வரி, நன்மாட்டு வரி, விவசாயப் பணிகளுக்கு மாடுகளை ஈடுபடுத்தி ஆதாயம் சேர்ப் பவர்களிடமிருந்து வசூலிக்கப்படுவது. இதனை சோழபாண்டியர்கல் வெட்டுக்களில் நல்லெருது' எனக்குறிக்கப் பட்டுள்ளது. மகாநவமி கிடாய் ஒட்டுறதிற்கு வரி, இராமநாத புரம், சீமையில் மகாநவமி சிறப்பான விழாவாக கொண்டாடி யதற்கான குறிப்புகள் இல்லை. ஆனால் செல்லமுத்து சேது பதி காலத்தில் சித்திரை, மகாநவமி, தீபாவளி தைப்பொங்கல் ஆகிய விழா நாட்களில் டச்சுக்காரர்கள், பட்டு போன்ற சிறந்த அன்பளிப்பு பொருட்களுடன் மன்னரைச் சந்தித்து வந்தார் என்ற செய்தி இராமநாதபுரம் மானுவலில் (பக்கம் 243) குறிப்பிடப்பட்டதில் இருந்து மகாநவமி, மறவர் சீமையின் விழா நாளாக இருந்தது என்பது தெரிய வருகிறது. ஆனால் இந்த மன்னர் காலத்தில் இருந்து நவராத்திரி விழாவின் பத்தாவது நாள் அல்லது மகள் நோம்பு மிகவும் விமரிசையாக கொண்டாடப் பட்டதற்கு பல செய்திகள் உள்ளன. அதேபோல அந்த விழாவையொட்டி பலியிடப்படும் ஆட்டுக் கிடாய்களுக்கு மானோன்புக் கிடாய் வரியொன்று வசூலிக்கப்பட்டதை இந்த மன்னரது இன்னொரு (கி.பி.1678ம் வருட) செப்பேடு தெரிவிக் கின்றது. நவராத்திரி விழா நடத்தப்படும் பொழுது இராம நாதபுரம் அரண்மனையில் உள்ள ராஜராஜேஸ்வரி அம்மனுக்கு БТ (ГЛГБТТLDГГ5UT ஆடுகள் பலியிடப்பட்டு இருக்கவேண்டும். அப்பொழுது அந்த அம்பிகையின் பூஜை வாமமார்க்க முறைப்படி உயிர்ப்பலியுடன் நடந்து வந்தது. கி. பி. 1894ல் இராமநாத புரத்திற்கு வருகைதந்த சிருங்கேரி மடாதிபதி, மன்னர் பாஸ்கரது வேண்டுகோளின்படி அம்பிகையின் மரகத பீடத்தை அகற்றி