பக்கம்:சேதுபதி மன்னர் செப்பேடுகள்.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சேதுபதி செப்பேடு எண் 19 (விளக்கம்) 1. செப்பேடு வழங்கிய வர் : திருமலை ரெகுநாத சேதுபதி மன்னர் 2. செப்பேடு பெற்றவர் : திருப்பெருந்துறை பரதேகி முத்திரையான அம்பலத்தாடும் பண்டாரம். 3. செப்பேட்டின் காலம் : சாலிவாகன சகாத்தம் 1586. கீலக ஆண்டு தை மாதம் 4. செப்பேட்டின் பொருள் : சோத்துக்கலையூர் செல்லப்பன் தர்மத்திற்கு நிலக்கொடை இந்த செப்பேட்டினை வழங்கிய திருமலை ரகுநாத சேதுபதி மன்னரது விருதாவளியாக பத்தொன்பது விருதுகள் இந்த செப்பேட்டில் கொடுக்கப்பட்டுள்ளது. இவையனைத்தும் இந்த மன்னரது முந்கைய செப்பேடுகளில் காணப்படுபவை தான. திருப்பெருந்துறை ஆவுடையப்ப சுவாமி திருக்கோயிலில் உஷாக்கால கட்டளைப்பூஜைக்கு சேதுபதி மன்னர் பெருங் காடு வழங்கியதை இந்தச் செப்பேடு தெரிவிக்கின்றது. இந்தக் கட்டளையை ஏற்கனவே சோத்துக்கலையூர் செல்லப்பன் என்பவர் ஏற்படுத்தி இருக்க வேண்டுமென்பது. செப்பேட்டு வரி 29ல் இருந்து பெறப்படுகிறது. மேலும் அந்த தர்மம் நன்றாக நடக் காத நிலையில் அல்லது இன்னும் சிறப்பாக நடக்க வேண்டும். என்ற நிலையில், பெரு விருப்புடன் பெருங்காட்டினை மன்னர்